லிபய சர்வாதிகாரி முசோலினியின் சர்வ வல்லமைமிக்க படையை எதிர்த்த முதியவரின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு… அடக்குமுறைக்கு எதிராக களம் காணும் போராளிகளுக்கு நாடு, மதம், இனம் கடந்து ஆதர்சமாக இப்போதும் திகழ்கிறார் உமர்முக்தார்… தூக்கிலிடப்பட்ட அவரின் போராட்டப் பாதையை, எழில் மிகு நடையில் நெஞ்சில் நிறுத்துகிறார் நாவலர் ஏ.எம். யூசுப்.
அஞ்சுமன் அறிவகம்... Read More
10
Sep2022
ஆண்-பெண் உறவுகள் குறித்த கலாச்சார புனைவுகளையும் கவித்துவ பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ.முருகனின் கதைகள். இந்த உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள் வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது மரம். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்ல என்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிரூபணம் செய்கின்றன.
அஞ்சுமன் அறிவகம்... Read More
September 10, 2022Admin
09
Sep2022
நேர் நேர் தேமா என்ற புத்தகம் கோபிநாத் சந்தித்த பிரபலங்கள் அளித்த பேட்டியின் தொகுப்பு ஆகும். பல்வேறு துறை சார்ந்த மனிதர்களின் பேட்டிகளை தொகுத்திருக்கின்றார். அவர்களின் வாழ்க்கை, தங்கள் துறையில் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்ச்சிகள், அவர்கள் இன்றுவரை தாரக மந்திரமாய் ஏற்றுக் கொண்டிருக்கும் பல சித்தாந்தங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
அஞ்சுமன் அறிவகம்... Read More
September 9, 2022Admin
07
Sep2022
வத்ஸலாவின் நாவல் வெறும் அம்மா-மகள் கதை மட்டுமல்ல. ஏராளமான இதர பாத்திரங்கள் ஆசிரியையுடைய அகன்ற சொல்லோவியத்தில் அவரவர்களுடைய பங்கைப் பெறுகிறார்கள். பொதுவாக சுயநலம் என்ற குணம் இந்த நாவலின் பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுகிறது. தொடக்கத்தில் வரும் சொற்களும் சிந்தனைகளும் இறுதியிலும் வந்து வட்டத்தைப் பூர்த்தி செய்கின்றன.
அசோகமித்திரன்
அஞ்சுமன் அறிவகம்... Read More
September 7, 2022Admin
06
Sep2022
2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல்
"தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.
ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார்.
எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது ... Read More
September 6, 2022Admin
04
Sep2022
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான ... Read More
September 4, 2022Admin
03
Sep2022
நூலாசிரியர் ப.சண்முகம் அவர்கள் தனது மருத்துவத்துறை அனுபவங்கள் மூலமும் மருத்துவ நூல்கள் மற்றும் பல மருத்துவ இதழ்கள் மூலமும் பெற்ற விளக்கங்களை இந்நூலில் எடுத்தாள்கிறார்.நூலில் இடம் பெற்றுள்ள விளக்கப்படங்கள் படிப்பவர் மணதில் பல உண்மைகளைப் பதிவு செய்யும்.
உடலிலுள்ள செல்கள் அணுக்கள் எலும்பு மண்டலம் சுவாச மண்டலம் உணவு மண்டலம் இரத்த ஓட்ட மண்டலம் ... Read More
September 3, 2022Admin
02
Sep2022
தமிழ்மகன் அவர்கள் எழுதியது.
வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிறது இந்த நாவல். வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்திற்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி புனைவின் வழியே ஒரு பண்பாட்டின் சுவடுகளை எழுதிச் செல்கிறார் தமிழ்மகன்.... Read More
September 2, 2022Admin
01
Sep2022
ஓவியங்கள் சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை. அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும், ரசிக்கவும், கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும் இவை முயற்சிக்கின்றன. வாசகர்களின் ரசனையின் பாதைகளைத் திறந்துகாட்டுகிற, செழுமைப்படுத்துகிற எஸ். ராமகிருஷ்ணனின் இடையறாத எழுத்து இயக்கத்தில் மற்றொரு முக்கியமான படைப்பு இது.... Read More
September 1, 2022Admin
31
Aug2022
இக்கட்டுரைகள் சுதந்திரவாத நோக்கு அ.ராவை கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன. வெவ்வேறு இலக்கிய சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குரூஸின் கொற்கையை தடைசெய்ய வேண்டுமென எழுந்த கோரிக்கையை, புதுமைப்பித்தனின் நாசகார கும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். பெருமாள் முருகனின் நாவலைத் டைசெய்யக்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த னுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். லக்கிய விவாதங்களில் அ.ராவின் ... Read More
August 31, 2022Admin