முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்வு
(மூல ஆதார நூல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது)
ஆசிரியர் : மார்டின் லிங்ஸ்
வெளியீடு : ஏ.எஸ்.நூர்தீன்
நூல் பிரிவு : IHR – 01 2309
நூல் ஆசிரியர் அறிமுகம் :
மார்டின் லி்ங்ஸ் (ஸெய்யித் அபூபக்ர் ஸிராஜு்தீன்) ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக்கத்தின் கலைத்துறைப் பட்டம் பெற்றுப் பன்னிரண்டு வருட காலம் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1952-ல் இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்று லண்டன் பல்கலைக்கழகத்து அறபு மொழிப் பட்டம் பெற்றார். பிரித்தானிய தொல்பொருளகத்தின் அறாபியக் கையேடுகளின் விசேஷ பொறுப்பாளராக விளங்கினார் என்பது இந்நூல் உருவாகக் காரணமாக அமைந்தது.
நூல் அறிமுகம்
எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளின் அறாபிய மூல கிரந்தங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்நூல். நபிகளார் கூறியவற்றைக் கேட்டவர்களும் அன்னாரது வாழ்க்கையோடு இணைந்திருந்தவர்ளும் அளித்துள்ள விவரங்கள் தெளிவுற அமைக்கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் சில முதன் முறையாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளதை இந்நூலில் காணலாம்.
முஹம்மது நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை மூல நூல்களின் அடிப்படையில் ஆய்ந்துணருபவர்களுக்கு இந்நூல் மிகச் சிறந்த புத்தகமாக திகழ்கிறது. அரிய இந்நூலை தமிழில் வாசித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.