கம்ப்யூட்டர் A to Z

கம்ப்யூட்டர் A to Z

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : கம்ப்யூட்டர் A to Z
ஆசிரியர் : காம்கேர் கே புவனேஸ்வரி
வெளியீடு : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GHR-4.1

நூல் அறிமுகம்

பத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை நிமிடங்களில் முடித்த தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம்.

ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து இன்று நமது அன்றாட தேவைகள் பலவற்றைக் கண் மூடித் திறக்கும் நேரத்தில் கச்சிதமாக செய்து முடித்துக் கெடுக்கும் ஆற்றல் கம்ப்யூட்டருக்கு உண்டு.

சட்டைப் பையிலே ‘பாக்கெட் அளவு கம்ப்யூட்டர்’ வைத்திருக்கும் காலம் இது. சூரியனைப் பற்றியும், சூரியனுக்கு கீழுள்ள அத்தனை விஷயங்கள் பற்றியும், படிக்க, படங்களாக பார்க்க, படித்ததையும் பார்த்ததையும் சேமித்து வைக்க, புதிய டிசைன்கள் உருவாக்க, கடிதங்கள் எழுத, வர்த்தக தொடர்பு கொள்ள இப்படி நம் வாழ்க்கைக்குக் கூடுதலான வசதி பெருக்கத்தைக் ஏற்படுத்திக்கொள்ள அடிப்படைக் கம்ப்யூட்டர் அறிவு என்பது அத்தியாவசிய தேவை.

இந்த அவசியம் கருதித்தான் கம்ப்யூட்டர் பற்றி A to Z விஷயங்களை விளக்கி மிகவும் எளிமையாக இந்த நூலில் கொடுத்திருக்கிறார் இந்நூல் ஆசிரியர். கம்ப்யூட்டரின் ஒவ்வொரு பாகத்தையும் விளக்கி சொல்லி இருப்பது மட்டுமல்லாமல் அதன் பயன்பாடு பற்றியும் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார்.

குழந்தைகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகம் செல்வோர், பெண்கள் ஆகிய அனைத்துத் தரப்பு மக்களும் கம்ப்யூட்டர் பற்றி எளிதாக தெரிந்து கொள்ள, இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.