கேஜிபி – ரஷ்ய உளவுத் துறை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : கேஜிபி – ரஷ்ய உளவுத் துறை
ஆசிரியர் : என்.சொக்கன்
வெளியீடு : மதி நிலையம்
நூல் பிரிவு : GP-600
நூல் அறிமுகம்
அமெரிக்காவும் ரஷ்யாவும் உலகத்தையே இருகூறாகப் பிரித்து கட்சி கட்டிக் கொண்டிருந்த நேரம். எதிர்கோஷ்டி என்ன செய்கிறது என்று தெரிந்துகொள்ள இரு கோஷ்டிகளும் துடித்தன.
அந்த நேரத்தில் ரஷ்யாவின் உளவுத்துறை ஒரு மிகப் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியது. எங்கே, யார், எப்படி என்றெல்லாம் நாம் கற்பனை செய்யமுடியாத இடங்களிலெல்லாம் தங்களது உளவாளிகளை நுழைத்து விறுவிறுவென்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தார்கள். அவை அவசியமா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம், உலகில் யார் பலமாக மூச்சு விட்டாலும் கூட, இங்கே ரஷ்யாவில் அதைக் கேட்க வேண்டும் அவ்வளவுதான் விஷயம்.
இதனால் சர்வதேச அளவில் மிகப் பலம் வாய்ந்த உளவு நிறுவனமாக உருவெடுத்தது கேஜிபி. பல நாடுகளைப் பற்றி அந்தந்த தேசத்து தலைவர்களுக்கு கூடத் தெரியாத விஷயங்கள் ரஷ்யாவுக்குப் தெரிந்தன. இதனால் யாரைப் பார்த்தாலும் இவன் கேஜிபி ஏஜென்டா இருப்பானோ என்று அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் குலை நடுங்க ஆரம்பித்தார்கள்.
ஒரு துப்பறியும் நாவலை விட சுவாரசியமான கதை கேஜிபியினுடையது.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.