ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
நூல் பெயர் : ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்
ஆசிரியர் : முகில்
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
நூல் பிரிவு : GHR-4.4 534
நூல் அறிமுகம்
பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலைமுறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி-ஹிட்லர்.
ஒரு சாமானியன் சர்வாதிகாரியாக விஸ்வரூபமெடுத்த சாகசத்தை, சறுக்கி வீழ்ந்த சரித்திரத்தை மட்டும் பேசுவதல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம். எந்தச் சூழலில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை உருவானது என்ற பின்னணியை ஆராய்வதில் தொடங்கி, ஹிட்லரின் பொது, தனிப்பட்ட வாழ்க்கையை இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம் வரை சொல்லப்படாத நிகழ்வுகளுடன் விவரித்திருப்பதே இந்நூலின் சிறப்பு.
ஆக்ரோஷம், ஆவேசம், ஆத்திரம், சீற்றம், வேகம், வெறி, உக்கிரம், துவேஷம், வன்மம் நிரம்பிய வில்லத்தனமான ஹிட்லரோடு, அன்பு, நட்பு, பாசம், ஏக்கம், சோகம், தவிப்பு, கண்ணீர், காதல், காமம் கலந்த இயல்பான ஹிட்லரையும் முகிலின் எழுத்தில் நீங்கள் தரிசிக்கலாம்.
அன்புடன் அழைக்கிறது,
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.