சதாம் ஹுசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்

சதாம் ஹுசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்

நூல் பெயர் : சதாம் ஹுசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்
ஆசிரியர் : பா.ராகவன்
வெளியீடு : மதி நிலையம்
நூல் பிரிவு : GHR-4.4 790

நூல் அறிமுகம்

இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒருவகையில் நவீன இராகின் அரசியல் வரலாறும் கூட. 24 வருடங்கள், அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர்.

தாய் வயிற்றில் சிசுவாக உருவான நாள் தொடங்கி, சதாம் மரணத்தின் சொந்தக்காரர். இரான் யுத்தம், குவைத் போர், வளைகுடாப் போர் என்று சதாமின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு அட்சரமும் ரத்தத்தால் எழுதப்பட்டவை. சிதைந்து கிடந்த இராக்கை மறுகட்டுமானம் செய்த ஓர் அற்புத சக்தியாகவும் சதாமைப் பார்க்க முடியும். கட்டாயக் கல்வி, கிராமப்புற வேலை வாப்புகள், மதச்சார்பற்ற ஆட்சி நிர்வாகம் என்று தன்னை நினைவுகூற, பல நல்ல காரியங்களையும் செய்தவர்.

இதனால்தான், சதாம் ஹுஸைன் ஒரு ஹீரோவாகவோ, வில்லனாகவோ உடனடி முத்திரை குத்த முடிவதில்லை.

சதாம் ஹுசைன் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அசத்தலான நடையில் அறிமுகம் செய்துவைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்கைளையும், அதற்கான காரணங்களையும் கூட இந்நூல் விவாதிக்கிறது.

இது போன்ற மாவீரர்களின் வரலாற்றை படித்து முன்னேற அன்புடன் அழைக்கிறது,

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.