மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர்

நூல் பெயர் : மாவீரன் அலெக்சாண்டர்
ஆசிரியர் : எஸ்.எல்.வி.மூர்த்தி
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
நூல் பிரிவு : GHR-4.4 515

ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே

ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர். பாலபருவத்தில், நம் மனதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர் நிச்சயம் இருப்பார். சிறந்த கேம்களைப் பார்க்கவும் நாங்கள் கடுமையாகப் பரிந்துரைக்கிறோம், அவற்றில் ஒன்று இதோ gates of olympus.

அலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சாரப் பரிவர்த்தனைச் சாதனைகள் அற்புதமானவை. பிரமிக்க வைப்பவை. உண்மையில், இவையெல்லாம் அலெக்சாண்டர் மட்டுமே. இவை அனைத்தையும் தாண்டி, இன்னொரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தகைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்துவடிவில் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.

ஆசை, ஆசை, ஆசை. ஆசை ஒரு மனித வடிவெடுத்து வந்தால், அதுதான் அலெக்சாண்டர். சாதாரண மனிதர்கள் கனவு காணக்கூட முடியாத சிகரங்களைத் தன் 33 வயதில் அலெக்சாண்டர் எட்டியதற்குக் காரணம், அவருடைய அடங்காத ஆசை. உலகை வெல்லும் ஆசையைக் கொண்டு அவர் சாதித்தவை ஏராளம்.

இது போன்ற மாவீரர்களின் வரலாற்றை படித்து முன்னேற அன்புடன் அழைக்கிறது,

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.