பிரான்சிஸ் இட்டிகோரா
பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகிய பிரான்சிஸ் இட்டிகோரா தமிழில் வாசிக்க கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
பெருத்த மழையின் பின்னணியில் இருக்கும் காற்று , நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. அது போல, நீண்ட உலக வரலாற்றின் பக்கங்களில் பலரின் பங்களிப்புகளும் இருப்புகளும், மறைக்கப்பட்டும், மாற்றப்பட்டும், மறந்தும் போயிருக்கின்றன. ஆனபோதும் அவ்வாறானவர்களின் சிலரது வாழ்க்கையை, மக்கள் கதைகள் மூலமும், பழக்க வழக்கங்களின் மூலமும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அவற்றை நகர்த்தி கொண்டுதான் இருக்கின்றனர்.
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த, பிரான்சிஸ் இட்டிகோரா எனும் மிளகு வியாபாரியின் கதை, கேரள மாநிலத்தின் குன்னங்குளத்து வியாபார பண்பாட்டின் வரலாற்றில் இருந்து உருவாகிறது.
அஞ்சுமன் அறிவகம்

Comments
Comments are closed.