Tally 7.2 (டேலி 7.2)

Tally 7.2 (டேலி 7.2)

நூல் பெயர் : Tally 7.2 (டேலி 7.2)
ஆசிரியர் : செல்வி காம்கேர் K.புவனேஸ்வரி
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம்
நூல் பிரிவு : GC-2094

நூல் அறிமுகம்

வேலைவாய்ப்புக்கு உதவும் டேலி சாஃப்ட்வேர் Tally 7.2 – க்காக எழுதப்பட்டுள்ளது. இந்நூலைப் பயன்படுத்த அக்கவுண்ட்ஸ் மாஸ்டராக இருக்கத் தேவையில்லை. ஆனால் அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்.

வாசகர்கள் இந்நூலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள நூலின் முன்னுரையிலிருந்து சில தகவல்களை இங்கே தருகிறோம்…

டேலி 7.2 என்ற பேக்கேஜுக்காக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் மூலம் Trail Balance, Profit and loss Account மற்றும் Balance Sheet போன்ற ரிப்போர்ட்களை மிகவும் எளிமையான முறையில் தயாரித்து பிரிண்ட் அவுட்டும் எடுக்க முடியும்.

மேலும் இன்வென்டரி கன்ட்ரோலுக்கு அடிப்படைத் தேவைகளான Stock item, stock group பேன்றவற்றைப் பராமரித்து stock Summary ரிப்போர்ட் மூலம் பொருட்களின் இருப்பு விகிதத்தைக் கண்டுபிடிக்கவும் முடியும்.

டேலி 7.2-ன் சிறப்பம்சங்களான VAT, TDS, Service Tax போன்ற விவரங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. VAT தமிகழகத்தில் அமல்படுத்தப்படாததால் VAT என்றால் என்ன என்பதை மட்டும் விரிவாக விளக்கியுள்ளேன்.

அக்கவுண்ட்ஸ் (Accounts) பற்றிய அடிப்படை அறிவு இருந்தால் இப்புத்தகத்தி்ன் மூலம் முழுமையான பலனை அடைய முடியும். டேலியில் உள்ள அத்தனை மெனு விவரங்களையும் பயன்படுத்திப் பலனடைய, அக்கவுண்ட்ஸ் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்திருக்க வேண்டும்.

Debit என்றால் என்ன? Credit என்றால் என்ன? என்ற அடிப்படை விவரங்களை எவரேனும் ஓர் அக்கவுண்ட்ஸ் ஆசிரியரிடம் கற்றுக் கொண்ட பிறகு டேலியைப் பயன்படுத்த தொடங்கவும்.

அரசாங்க வேலைவாய்ப்பு முதல் பலதுறைகளிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரும் மிகவும் பயனுள்ள இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

 

/ General Tamil

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *