தி.மு.க வரலாறு (1949-1969)

தி.மு.க வரலாறு (1949-1969)

 

நூல் பெயர் : தி.மு.க வரலாறு (1949-1969)
ஆசிரியர் : க.திருநாவுக்கரசு
வெளியீடு : நக்கீரன் பதிப்பகம்
நூல் பிரிவு : GP

நூல் அறிமுகம்

திராவிட இயக்கச் சிந்தனையாளரும், ஆய்வாளருமான க.திருநாவுக்கரசு அவர்கள், “தி.மு.க.வரலாறு (1949-1969) எனும் தலைப்பில் 6 தொகுதிகள் கொண்ட ஒரு நூலை வெளியிடத் திட்டமிட்டு, முதற்கட்டமாக 1958 ஆம் ஆண்டு வரையுள்ள வரலாற்றுச் செய்திகைளத் திரட்டி, மொத்தம் 1840 பக்கங்கள் கொண்ட 3 தொகுதிகளை உருவாக்கியுள்ளார்.

வாசகர்கள் இந்நூலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள தி.மு.க.வின் பொதுச் செயலாளாளர் க.அன்பழகன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து சில தகவல்களை இங்கே தருகிறோம்.

வரலாற்றுக் குறிப்புகளோடு மிகச் சிறந்த அரசியல் கட்டுரைகளை எழுதக் கூடிய எனது அருமைத் தோழர் க.திருநாவுக்கசு அவர்கள், திராவிட இயக்கத் தொடர்புடைய இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை வடித்து தந்து இருப்பவர். அந்த வரிசையில்,

தி.மு.க.வரலாறு (1949-1969) எனும் நூலை ஆறு பாகங்கள் எழுதி முடித்து இருக்கிறார். அவற்றுள் முதல் மூன்று பாகங்களுக்கான அணிந்துரைதான் இது!

திராவிட இயக்கம் தோன்றி (1912) நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நீதிக்கட்சிக்கு 2016-இல் நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்கம் தோன்றி 90 ஆண்டுகள் ஆகிவிட்டன. நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந் இயங்கி, பின்னர் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தி.மு.கழகம் தொடங்கப்பட்டு 66 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இவ்வியக்கங்களோடு நான் 81 ஆண்டுகள் கலந்து வாழ்ந்து இருக்கின்றேன். வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.

அந்நிகழ்வுகளையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கிறபோது, எழுதியவற்றைப் படிக்கிறபோது ஒரு பிரமிப்புக் கலந்த பூரிப்பு உண்டாகிறது. அதனால் ஒரு மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல, இன்னும் சொல்லவதானால் இந்நூலைப் படிப்பதனால் எழுச்சியும் புத்துணர்வும் தெம்பும் கிடைக்கின்றன.

தி.மு.கழகத்தைப் பற்றி முழுவதும் அறிந்து கொள்ள உதவும் விரிவான இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது,
அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.