Tag: தமிழ் ஆர்வமூட்டும் கதைகள்

06

Sep2022

சூல்

0  
2019-ஆம் ஆண்டிற்கான ''சாகித்திய விருதினை வென்ற நாவல் "தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன். ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார். எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது ... Read More
September 6, 2022Admin

05

Sep2022
தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் சமயத்துக்கேற்ப, நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தி அனுமதி கிடைத்தி விட்டதாக எண்ணிக்கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம் எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பிவிட்டால், கல் ... Read More
September 5, 2022Admin

04

Sep2022
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குடும்பத்தின் நினைவுகளும் ஆடுகளின் துணையில் மட்டுமே ஆறுதல் கொண்டிருக்கும் நஜீபைத் துன்புறுத்துகிறது. முடிவில், பாலைவனச் சிறையிலிருந்து தப்பிக்க இந்த இளைஞன் ஓர் ஆபத்தான ... Read More
September 4, 2022Admin

03

Sep2022
நூலாசிரியர் ப.சண்முகம் அவர்கள் தனது மருத்துவத்துறை அனுபவங்கள் மூலமும் மருத்துவ நூல்கள் மற்றும் பல மருத்துவ இதழ்கள் மூலமும் பெற்ற விளக்கங்களை இந்நூலில் எடுத்தாள்கிறார்.நூலில் இடம் பெற்றுள்ள விளக்கப்படங்கள் படிப்பவர் மணதில் பல உண்மைகளைப் பதிவு செய்யும். உடலிலுள்ள செல்கள் அணுக்கள் எலும்பு மண்டலம் சுவாச மண்டலம் உணவு மண்டலம் இரத்த ஓட்ட மண்டலம் ... Read More
September 3, 2022Admin

02

Sep2022
தமிழ்மகன் அவர்கள் எழுதியது. வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிறது இந்த நாவல். வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்திற்கும் இன்றைய தேதியில் வயது முக்கால் நூற்றாண்டாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி புனைவின் வழியே ஒரு பண்பாட்டின் சுவடுகளை எழுதிச் செல்கிறார் தமிழ்மகன்.... Read More
September 2, 2022Admin

01

Sep2022
ஓவியங்கள் சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை. அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும், ரசிக்கவும், கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும் இவை முயற்சிக்கின்றன. வாசகர்களின் ரசனையின் பாதைகளைத் திறந்துகாட்டுகிற, செழுமைப்படுத்துகிற எஸ். ராமகிருஷ்ணனின் இடையறாத எழுத்து இயக்கத்தில் மற்றொரு முக்கியமான படைப்பு இது.... Read More
September 1, 2022Admin

31

Aug2022
இக்கட்டுரைகள் சுதந்திரவாத நோக்கு அ.ராவை கொண்ட ஒரு இடதுசாரி என்று காட்டுகின்றன. வெவ்வேறு இலக்கிய சர்ச்சைகளை ஒட்டி அ.ரா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ஜோ.டி.குரூஸின் கொற்கையை தடைசெய்ய வேண்டுமென எழுந்த கோரிக்கையை, புதுமைப்பித்தனின் நாசகார கும்பலை சென்னைப் பல்கலைக்கழகம் பாடத்திட்டத்திலிருந்து விலக்குவதற்கு முடிவெடுத்ததை இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். பெருமாள் முருகனின் நாவலைத் டைசெய்யக்கோரி எழுந்த கலகத்தை தன் சொந்த னுபவங்களுடன் இணைத்துக்கொண்டு ஆராய்கிறார். லக்கிய விவாதங்களில் அ.ராவின் ... Read More
August 31, 2022Admin

30

Aug2022
எஸ்.ரா வின் புதிய நாவலான 'சஞ்சாரம்' குறித்து ஒருசில விஷயங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.நாதஸ்வரக் கலைஞர்கள் எங்கே இசையைக் கற்றுக்கொள்கிறார்கள், எங்கே நாதஸ்வரம் தயாரிக்கிறார்கள், கல் நாயனம் என்றால் என்ன, எந்த நிகழ்ச்சிகளிலெல்லாம் வாசிக்கிறார்கள், ஒவ்வொரு நாதஸ்வர வித்துவான்களின் இசைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முயல்வது, நையாண்டி மேளம் வாசிப்பவர்களைச் சந்திப்பது என்று ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து அதைப் பற்றியே தேடிக்கொண்டே ... Read More
August 30, 2022Admin

29

Aug2022
தமிழ் வாழ்க்கையின் வினோதமான, உலர்ந்த பக்கங்களை எழுதிச் செல்லும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் எஸ்.செந்தில்குமார் தனித்த அடையாளம் கொண்டவர். கதையின் உள் மடிப்புகளைக் கலைத்து விரித்துக்கொண்டே செல்லும் இவரது மொழி இடையறாத வளையங்கள் உருவாகும் நீர்ப் பரப்பாக மாறிவிடுகிறது. அதனால் கதைகள் தாம் துவங்கிய திடப் புள்ளியிலிருந்து விலகி அனுபவங்களின் குழம்பிய வண்ணங்களைக் காட்சிப் படுத்துகின்றன. அஞ்சுமன் அறிவகம்... Read More
August 29, 2022Admin

28

Aug2022
அமெரிக்கக் குழந்தைகளுக்கான மருந்துகளை மேம்படுத்தும் வகையில், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ... Read More
August 28, 2022Admin