P for நீங்கள்!
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: P for நீங்கள்!
ஆசிரியர் : கே.எஸ்.ராகவன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
பிரிவு : GMA – 2240
நுால்கள் அறிவாேம்
மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்.
செல்ஃபோனில் எவ்வளவு நேரம் பேசலாம்? கல்யாணப் பந்தியில் கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகம் என்று ஒன்று உண்டு, தெரியுமா? ஒரு டாக்டரிடம் எப்படிப் பேசலாம், எப்படிப் பேசக்கூடாது? பத்து மணிக்கு மீட்டிங் என்றால் பத்து மணிக்கே போய்விடவேண்டுமா?
மேலோட்டமாகப் பார்த்தால், இதில் எதுவொன்றுமே முக்கியமான கேள்வியாகத் தோன்றாது. ஆனால், Mr. பர்ஃபெக்ட் ஆக நீங்கள் மாற விரும்பினால், இத்தனைக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டும்.
சரி, Mr. பர்ஃபெக்ட் ஆக ஏன் மாறவேண்டும்? ஏனென்றால், நீங்கள் வாழ்வின் மிக உன்னதமான ஒரு நிலையை அடைய வேண்டும். ஏனென்றால்,யாரும் உங்களைப் பார்த்து சுண்டு விரலைக் கூடஉயர்த்தக்கூடாது. ஏனென்றால், உலகத்தை நீங்கள் வசப்படுத்தவேண்டும்.
சின்ன விஷயங்களை பூதக்கண்ணடியால் பெரிசுபடுத்திக் காட்டும் முயற்சியல்ல இது.மாறாக, தூரத்தில் இருப்பதை டெலஸ்கோப் கொண்டு ஆராயத் தூண்டும் நூல்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
Comments are closed.