Category: General English

20

Oct2022
வத்ஸலாவின் நாவல் வெறும் அம்மா-மகள் கதை மட்டுமல்ல. ஏராளமான இதர பாத்திரங்கள் ஆசிரியையுடைய அகன்ற சொல்லோவியத்தில் அவரவர்களுடைய பங்கைப் பெறுகிறார்கள். பொதுவாக சுயநலம் என்ற குணம் இந்த நாவலின் பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுகிறது. தொடக்கத்தில் வரும் சொற்களும் சிந்தனைகளும் இறுதியிலும் வந்து வட்டத்தைப் பூர்த்தி செய்கின்றன.(அசோகமித்திரன் முன்னுரையிலிருந்து) அஞ்சுமன் அறிவகம்... Read More
October 20, 2022Admin

19

Oct2022
இந்து மதத்தை பற்றிய உலகின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவரின் முன்னோடியான படைப்பு. ஏற்கனவே அதன் அசாதாரணமான ஆழ்நோக்கு, பகுப்பாய்வு ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றது. இந்த புத்தகம் ஒரு செவ்வியல் நூலாகும் தகுதி படைத்தது. டோனிகருடைய நூல் தனது வீச்சில் மிக வியப்பூட்டுகின்ற ஒன்று. இதற்குமுன் எவரும் இத்தகைய நூல் ஒன்றை எழுத முடியும் என்று நினைத்தும் இருக்கமாட்டார்கள்… பரிவுணர்ச்சியோடும், ஒத்துணர்வோடும், நகைச்சுவையோடும், கூருணர்வோடும் எழுதுகிறார்… ஒரு சிறந்த புத்தகம்.... Read More
October 19, 2022Admin

11

Oct2022
வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு. வாழ்வின் பிரச்னைகளுக்குத் தீர்வு அவற்றை அணுகும் முறையில் இருக்கிறது. பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது? அவற்றை எவ்வாறு தீர்ப்பது? எல்லாப் பிரச்னைகளையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. ... Read More
October 11, 2022Admin

07

Oct2022
காஞ்சனா தாமோதரனின் இந்தக் கதைகள் வேறு வேறு கலாச்சாரப் பின்புலங்களின் வழியே நிகழும் வாழ்வின் அபூர்வ தருணங்களை வெளிப்படுத்துகின்றன. தேசங்கள், பண்பாடுகள், மொழிகள் என எல்லா வித்தியாசங்களுக்கும் அப்பால் மனித உணர்வுகளும் உறவுகளின் ஆதாரமான நிறங்களும் ஒன்றே என்பதை இக்கதைகள் வசீகரத்துடன் பதிவுசெய்கின்றன. அஞ்சுமன் அறிவகம்
October 7, 2022Admin

06

Oct2022
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முதல் தொகுதி) சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்குகள் இக்கதைகளின் ஆதார சுருதியாக இருக்கின்றன. அஞ்சுமன் அறிவகம்
October 6, 2022Admin

05

Oct2022
கி.ராஜநாராயணனும் கழனியூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம்பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வருபவை. அவை ஆபாசத்தையோ வக்கிரத்தையோ முன்மொழிபவை அல்ல. மனித இயற்கையில் பாலியல் தேவைகள், கற்பனைகள், மீறல்கள் குறித்த புனைவுகளே இக்கதைகள். பாலியல் மீதான ஒடுக்குமுறை ஒருபுறமும் பாலியல் கேளிக்கைகள் இன்னொரு புறமும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் இக்கதைகள் ஒரு சமூகத்தின் ... Read More
October 5, 2022Admin

03

Oct2022
வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள். Mob Psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், 'நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன் வம்பு?' என்ற Play Safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு சில 'தியரிகளை உச்சாடனம் செய்துகொண்டு, 'உஞ்ச விருத்தி' செய்கிற பிராமண பிம்பத்தின் கைதிகள். பெண்கள் ஆணின் 'அடிமை', 'மகிழ்வூட்டும் ... Read More
October 3, 2022Admin

02

Oct2022
Book Title நபிமார்கள் வரலாறு (பாகம் 2) Author எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம் ISBN 9789387853034 Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் Pages 688 Year 2018 அஞ்சுமன் அறிவகம்... Read More
October 2, 2022Admin

30

Sep2022
ம​லை ​போன்ற துக்கத்​தை ​மெளனமாகத் தாங்கி நிற்கும் சிறிய கண்ணீர்த் துளி​யைப் ​போல, ஒரு மிகப்​பெரிய வலி​யைச் சுமந்து நிற்கின்ற ஒரு த​லைமு​றை இ​​ளைஞர்களின் ​சோகத்​தையும் மத​மோதல்களால் குண்டு ​வெடிப்புகளால் உயிரிழந்த, வாழவிழந்த அப்பாவி மக்களின் துயரத்​தையும் மதச்சார்பற்ற சமூகத்தின் மனசாட்சியின் முன்பு ​​வைக்க​வே விரும்புகி​றேன் என்று இந்த நாவலின் மூலம் நமக்க எடுத்து​​ரைக்கிறார். அஞ்சுமன் அறிவகம்... Read More
September 30, 2022Admin

29

Sep2022
ஈழத்தமிழ் எழுத்தாளரும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவா 28-1-2021 அன்று தன் 94 ஆவது அகவையில் மறைந்தார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். முற்போக்கு இலக்கியத்திற்காக மல்லிகை என்னும் மாத இதழை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார். ஈழ இலக்கியத்தின் பல குறிப்பிடத்தக்க படைப்புக்கள் மல்லிகையில் வெளியாகியிருக்கின்றன. பல ஆண்டுகள் மல்லிகை எனக்கு தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தது. நான் வாசிக்கநேர்ந்தபோது அதன் பொற்காலம் முடிவுற்றுவிட்டிருந்தது. பெரும்பாலும் ... Read More
September 29, 2022Admin