உறவுகளும் உரிமைகளும்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : உறவுகளும் உரிமைகளும்
ஆசிரியர் : பின்துல் இஸ்லாம்
வெளியீடு : இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
நூல் பிரிவு : IF-02
நூல் அறிமுகம்
நல்ல முஸ்லிமாக இறைவனுக்கு அஞ்சி, இறைவழிகாட்டுதலின்படி உள்ளன்போடு வாழ விரும்புகிற எவரும் இந்த சொந்த, பந்தம், உறவு, நட்பு மற்றும் எல்லா வகையான மனித உறவுகளுடனும் நயமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உரிமைகள் என்னவென்பதைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாக, தெளிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவற்றைத் தம்முடைய நெஞ்சங்களில் பசமையாக வைத்திருக்க வேண்டும். அவற்றை நிறைவேற்றுவதற்காக இருபத்தி நான்கு மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு சொந்த பந்தம், நட்பு, உறவு மற்றும் அனைத்து மனித உறவுகளின் உரிமைகள் என்னென்ன என்பதை தனித்தனி தலைப்புகளில் பட்டியலிட்டு விவரிப்பதுதான் இந்நூல். எல்லாமே திருக்குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள், இறைநேசர்களின் அமுதமொழிகள் அகியவற்றின் ஒளியில் சிறப்பாக தொகுக்கப்பட்டிருப்பது இந்நூலுக்கு அழகு கூட்டுவதாகவும், தனிச்சிறப்பு அளிப்பதாகவும் உள்ளது.
உறவுகளைச் செப்பனிடுவதிலும் உறவு முறைகளில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் உறுதுணையாக இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.