மோட்டார் வாகனச் சட்டம்
நூல் பெயர் : மோட்டார் வாகனச் சட்டம்
மொழியாக்கம் : புலமை. வேங்கடாசலம்M.A.,B.L.,சட்டத் தமிழறிஞர், தஞ்சை, ATC.இராதாகிருட்டிணன்M.SC.,R.B.V.நிறுவனர்,ATC சட்ட நூல்கள்
வெளியீடு : ஸ்டார் லா புக்ஸ்
நூல் பிரிவு : GL–1501
நூல் அறிமுகம்
தமிழ்கூறு நல்லுலக மக்கள் தெள்ளத்தெளிவாகச் சட்டத்தைத் தமிழில் தெரிந்து கொண்டிடும் வகையில் பல்வேறு சட்ட நூல்களை எழுதிவரும் அவர் மோட்டார் வாகனச் சட்டம் என்னுந் தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் தலைப்பு இயக்கூர்திகள் சட்டம் என்று தான் அமைந்திருத்தல் வேண்டும். எனினும் பொது மக்கள் தலைப்பை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் மோட்டார் வாகனச் சட்டம் என்று நூலுக்குத் தலைப்பிட்டுள்ளார்.
மோட்டார் வாகனச் சட்டம் என்னும் இந்நூல் ஆங்கிலச் சட்டநூல்களை விட மிகவும் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் பயின்று வரும் சொற்களுக்கான பொருள் விளக்கம், வாகனகளுக்கான உரிமம் பெறும் முறை, வாகனங்களை பதிவு செய்வதற்கான வகை, காப்பீடுகள், காப்பிட்டுக் கழகத்தின் கட்டுப்பாடு, மோட்டார் வாகன விபத்தில் நட்ட ஈடு கோரும் வழக்குகளில், வழக்கை விசாரிக்கும் தீர்ப்பாயம், மோட்டார் வாகன தொடர்பான குற்றங்களுக்கான தண்டனை ஆகியவற்றிற்கும் இன்ன பிற வற்றிற்கும் மொழியாக்கமும் வழக்கு தீர்வுகளும் தரப்பட்டுள்ளன.
மோட்டார் வாகன சட்டத்தை சாலையில் நடந்து செல்வோரிலிருந்து மோட்டார் வாகனம் வைத்திருக்கின்றவர், அதனை செலுத்துபவர் அனைவரும் படித்திடுவது மிகவும் அவசியமானதாகும்.
சட்டத்தை, கல்லூரிக்குச் சென்று தான் படிக்க வேண்டும் என்பதில்லை, முறையாகவும் தெளிவாகவும் எழுதப்பட்ட சட்ட நூல்களை வாங்கி படித்தாலே போதுமானதாகும்.
இத்தகைய நூல்களை படித்து பயன் பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.