நவ சீனப் புரட்சியின் வரலாறு

நவ சீனப் புரட்சியின் வரலாறு

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : நவ சீனப் புரட்சியின் வரலாறு
ஆசிரியர் : ஹோ கான் சி
தமிழில் : சு.பாலவிநாயகம்
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
நூல் பிரிவு : GHR-01 687

நூல் அறிமுகம்

1919-ஆம் ஆண்டு மே 14 தேசிய இயக்கம் முதல் 1956 வரையிலான சீன மக்கள் போராட்டத்தின் விரிவான சித்திரம்.

ஏகாதிபத்தியம், நிலப்புரபுத்துவம், அதிகாரவர்க்க முதலாளித்துவத்திற்கு எதிராகச் சீன மக்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து நின்ற போராட்ட வரலாறு.

மூன்று உள்ளாட்டு யுத்தங்கள், ஜப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்த யுத்தம், பிற்போக்கு கோமிங்டாங் ஆட்சியை தூக்கி எறிந்து, சீனமக்கள் குடியரசு உருவான வரலாறு.

விடுதலைக்குப் பின் தேசப் பொருளாதாரத்துக்கு உயிரூட்டி வளர்த்த வரலாறு.

பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த கொள்கை நிலைகளைப் பற்றிய விரிவான செய்திகள்.

சீனப் புரட்சியின் பிரத்தியேக தன்மைக்கேற்ப, மார்க்சிய-லெனிய அடிப்படையில், தோழர் மாசேதுங் தலைமையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி வகுத்த நடைமுறை கொள்கைகளின் உயிரோட்டமான விளக்கம்.

ஆகிய அத்தனை அம்சங்களையும் இந்நூல் விரிவாக விவரிக்கிறது. வாசகர்கள் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.