வைரமுத்து சிறுகதைகள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : வைரமுத்து சிறுகதைகள்
ஆசிரியர் : டாக்டர் பொன்மணி வைரமுத்து
பதிப்பகம் : சூர்யா லிட்டரேச்சர்(பி) லிட்
நூல் பிரிவு : GS – 283
நூல் அறிமுகம்
விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொகுப்பின் மூலம், இலக்கியத்தில் முக்கியமானதும் கடினமானதுமான சிறுகதைத் துறையிலும் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். இந்தக் கதைகளில் வரும் நடேச அய்யரும் (வேதங்கள் சொல்லாதது), கவி அப்துல்லாவும் (மார்க்கம்), வாத்துராமனும் (கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்), சின்னமணியும் (அப்பா), நடிகர் பரமேஷூம் (சிரித்தாலும் கண்ணீர் வரும்), டைகர் ராமானுஜமும் (மாறும் யுகங்கள் மாறுகின்றன), ஈஸ்வரியும் (அர்த்தநாரீஸ்வரி), நாம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்தாம். ஆனால் அவர்களின் அக உலகம்? அது நாம் அறியாதது. அந்த அக உலகின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கின்றன இந்த தொகுப்பிலுள்ள கதைகள்.
மிகவும் பயனுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.