நூறு பேர்
நூல் பெயர் : நூறு பேர்
மூல நூல் ஆசிரியர் : மைக்கேல் ஹெச்.ஹார்ட்
தமிழில் : பதிப்பாசிரியர் : மனவை முஸ்தபா
வெளியீடு : மீரா பப்ளிகேஷன்
நூல் பிரிவு : GHR-4.5 887
கடந்த 10 ஆண்டுகளில் பல மொழி பேசும் உலக மக்களால் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசப்பட்டதென்றால் அது “100 பேர்” என்ற இந்த புத்தகம் தான். உலக மக்களிடத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நூல் அறிமுகம்
இவ்வுலகில் உயிர் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில், வரலாற்றின் போக்கில் பெரும் மாறுதல்களை, தாக்கத்தை உண்டு பண்ணும் அளவுக்கு மிகப் பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார்? இந்த வினாவுக்குரிய விடைதான் இந்த நூல். வரலாற்றில் மிகப்பெரும் செல்வாக்குப் பெற்றவர்கள் என நான் நம்புகிற நூறு பேரின் பட்டியலே இந்நூல்.
வரலாற்றிலும் உலகின் போக்கிலும் மிகப் பெரும் விளைவை ஏற்படுத்திய 100 பேர் யார் என்பதைப் பற்றியே விவாதிக்கிறது. இந்த 100 பேரையும், அவரவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்நூலின் ஆசிரியர் வகைபடுத்தியிருக்கிறார்.
இந்நூலாசிரியர் கிறிஸ்தவராக இருந்த போதிலும் உலகின் மாபெரும் புகழ் வாய்ந்த100 நபர்களில் முதலிடத்தை முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்து முழு ஐரோப்பாவையும் திரும்பி பார்க்க வைத்தார். அதற்கான காரணத்தையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சுவாரசியமான தகவல்களையும், தனது கருத்தால் மிகப் பெரும் தாக்குதலையும் ஏற்படுத்திய இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.