டீசல், பெட்ரோல் & ஜெட் என்ஜின் மெக்கானிசம்
நூல் பெயர் :டீசல், பெட்ரோல் & ஜெட் என்ஜின் மெக்கானிசம்
மூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.)
பதிப்பாசிரியர் :விகரு.இராமநாதன்
வெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு :GAR–2437
நூல் அறிமுகம்:
ஆதிகால மனிதன் தனது அன்றாட உணவுக்காக, விலங்குகளைப் போல காடுகளில் சுற்றித் திரிந்தான். அவனுக்கு தேவையான ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் சுமந்து கொண்டு கால் நடையாகவே பயணம் செய்தான். நாளடைவில் அவன் பயணம் செய்வதற்கு குதிரைகளையும், ஒட்டகங்களையும் பயன் படுத்தினான். அதன் பிறகு குதிரை வண்டிகளையும், ஓட்டக வண்டிகளையும், மாட்டு வண்டிகளையும் பயன்படுத்தினான். இது போன்ற வண்டிகளை பயன்படுத்துவது கடினமாக இருந்தது. அதன் விளைவாக நீராவியினால் இயங்கக்கூடிய வாகனங்களைக் கண்டு பிடித்தனர்.நீராவி என்ஜினை இயங்க வைப்பது கடினமாக இருந்தது. ஆகவே, நீராவி என்ஜினுக்குப் பிறகு டீசல் என்ஜினும், அதிக எடை கொண்டதாகவும், வேகம் குறைவாகவும் இருந்தது. ஆகவே ஒயிட் பெட்ரோல் மற்றும் எரிவாயுக்களின் மூலமாக இயங்கக் கூடிய ஜெட் என்ஜின்கள் கண்டு பிடிக்கப்பட்டன. ஆகாய விமானம், நவின கார் முதலியவற்றில் ஜெட் என்ஜின்கள் பயன் படுத்தப்படுகிறது.
இந்தப் புத்தகத்தை படிக்கும் மாணவர்கள் எல்லாவிதமான என்ஜின்களைப் பற்றியும் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக டூ வீலர், கார், பஸ், லாரி, கப்பல், விமானம், ராக்கெட் முதலிய பலவிதமான என்ஜின்கள் இயங்கும் விதம் பற்றி நூற்றுக்கணக்கான விளக்கப்படங்களுடன் பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன.இதற்கு முன்பாக நான் எழுதிய பல தொழிற் கல்வி புத்தகங்கள் தமிழக நூலக கமிட்டியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
எமது புத்தகங்களைப் படித்து தமிழகம் மற்றும் பல அயல் நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, நீங்களும் இப் புத்தகத்தைப் படித்துப் பயன் பெறும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இத்தகைய நூல்களை படித்து மேலும் கற்க இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.