இனி எல்லாம் வெற்றிதான்
வாழ்க்கையில் எந்த அளவு துன்பங்களை ஏற்க நாம் தயாராக இருக்கிறோமோ அந்த அளவுக்கு வெற்றிகளையும் நம்மால் பெற முடியும். குழந்தையைப் பெற வேண்டுமானால் பிரசவ வேதனையை அனுபவித்தே தீர வேண்டும். ஒரு வெற்றியை அடைய வேண்டுமானால் ஒரு போராட்டத்தை நடத்தியே தீரவேண்டும். தோல்வியே இல்லாமல் எடுத்த எடுப்பில் வெற்றி கண்ட பலரும் ஒரு தோல்வி வந்ததுமே தாள முடியாமல் துவண்டு விடுகின்றனர். அவ்வாறில்லாமல் பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றி கண்டவர்களே அந்த வெற்றியைக் கடைசிவரை தக்கவைத்துக் கொள்கின்றனர். நம்பிக்கை என்ற வெளிச்சம் நமக்குள் இருக்கிறது.உங்கள் பலத்தைப் பற்றி நீங்களே எடை போடத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி உங்களை நீங்களே உணர்ந்து கொண்டால் உங்களுக்கு இனி எல்லாமே வெற்றிதான்.வெற்றி தேவதை உங்கள் வீட்டு வாசலில்..
அஞ்சுமன் அறிவகம்

Comments
Comments are closed.