இந்த விநாடி

இந்த விநாடி

சிகரத்தை எட்ட ஆசைப்படுபவரா நீங்கள்? அதற்கு வழி தெரியாமல் தவிக்கிறீர்களா? இதோ இந்த விநாடி உங்கள் கையில் இருந்தால் நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளலாம். வெற்றி – சந்தோஷம் இந்த இரண்டு வார்த்தைகளில் எல்லா மனிதர்களுடைய ஆசைகளையும் அடக்கி விடலாம்.

வெற்றியையும் சந்தோஷத்தையும் நாம் அடைவதற்கு வழிகாட்டும் நூல்கள் பல உள்ளன. பலவிதமான உத்திகளை அவை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும்விட தலைசிறந்த வழி நீங்கள் யாரெனத் தெரிந்துகொள்வதுதான். எனவே உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல உண்மைகளை இந்த நூல் உங்களுக்குச் சொல்லும்.

1980களில் எழுதத் தொடங்கிய நாகூர் ரூமி இதுவரை 45 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை, நாவல், சுய முன்னேற்றம், வாழ்க்கை வரலாறு, மதம், ஆன்மிகம், தியாகம் என பல தளங்களில் இவர் இயங்குபவர். இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது. இவரது இலியட் காவிய தமிழாக்கம் நல்லி – திசையெட்டும் விருதினைப் பெற்றது.

இந்த விநாடி இவரது மிக சமீபத்திய படைப்பு. ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராகப் பணியாற்றுகிறார் இந்தப் பேராசிரியர். மாதம் ஒருமுறை சென்னையில் ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்துகிறார் ஜீன்ஸ் போட்ட இந்த நவீன குரு.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil / Tags:

Share the Post

About the Author

Comments

Comments are closed.