விண்டோஸ் 7
நூல் பெயர் : விண்டோஸ் 7
ஆசிரியர் : கே.சுந்தரராஜன் M.SC., A.M.I.E.T.E.,
வெளியீடு : கண்ணதாசன் பதிப்பகம்
நூல் பிரிவு : GC – 2096
நூல் அறிமுகம்
விண்டோஸ் 7 உலகிற்கு உங்களை வரவேற்கிறேன். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக கம்ப்யூட்டர் உலகைத் தன் கட்டுப்பாட்டில் விண்டோஸ் வைத்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேரில் ஏற்பட்ட மிகப் பெரிய முன்னேற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விண்டோஸ் மேம்பட்டுத் தன் செயல் திறனை, ஆற்றலைப் பெரிதும் வளர்த்துக் கொண்டுள்ளது.
விண்டோஸ் குடும்பத்தில் அண்மையில் வெளியானதுதான் விண்டோஸ் 7. ஏற்கனவே வெளியான விண்டோஸ் விஸ்ட்டாவின் அடிப்படையில் தான் விண்டோஸ் 7 வெளியாகியுள்ளது. எனினும் கம்ப்யூட்டர் பயனாளர்களால் பெரிதும் விரும்பப்படாத விஸ்ட்டாவின் சில செயல்கள், நிகழ்வுகள், இடையூறுகள் போன்றவற்றைக் களைந்து விண்டோஸ் 7 ஆக மாற்றி கொடுத்த்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
மிகமிக வேகமாக செயல்படும்படி, எல்லா ஹார்ட்வேர் உறுப்புகளையும் கையாளும்படி, பயன்படுத்துவதற்கு எளிமையாக,புது வசதிகளுடன், புதுமையான அம்சங்களுடன் விண்டோஸ் 7 வெளிவந்துள்ளதால் அதைக் கம்ப்யூட்டர் பயனாளர்கள் பெரிதும் விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர். வீறு நடை போட்டு வெற்றிகரமாகப் பவனி வருகிற விண்டோஸ் 7 ஐ நீங்கள் பயன்படுத்தப் போவது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
விண்டோஸ் 7 இன் முக்கிய அம்சங்கள் பலவற்றை இந்த புத்தகத்தில் நீங்கள் காணலாம். எனினும் சில பகுதிகளை விவரிக்க புத்தகத்தில் இடம் இல்லாததால் அவை விடுப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிப்பவர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் மாஸ்டர்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதி. தங்கள் கம்ப்யூட்டர்களின் என்ன சாப்ட்வேர் பிரச்சனைகள் எழுந்தாலும் அவற்றை அவர்களால் சரி செய்ய முடியும்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.