நவீன கால இந்தியா

நவீன கால இந்தியா

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : நவீன கால இந்தியா
ஆசிரியர் : பிபன் சந்திரா 
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 
நூல் பிரிவு : GHR-02-797

நூல் அறிமுகம்

இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள், நிறுவனங்கள், வரலாற்றை உருமாற்றும் சக்திகள் ஆகியவற்றின் மீது பிபன் சந்திரா கவனத்தைக் குவிக்கிறார்.

இந்தியாவில் காலனியாதிக்கம் நிலைபெறுவதற்கான சமூகக் காரணிகள், காலனியக் கொள்கைகள், கொள்கைகளுக்கான எதிர்விளைவுகள், சமூக மறுமலர்ச்சி, தேசிய இயக்கத்தின் எழுச்சி ஆகியவற்றை உலக வரலாற்றுப் போக்கின் பகைப்புலத்தில் பிபன் சந்திரா விவரிக்கின்றார்.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.