தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் 

தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் 

நூல் பெயர் : தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் 
மூலநூலாசிரியர் : பாஷாசிங்
தமிழாக்கம் : விஜயசாய் 
வெளியீடு : விடியல் பதிப்பகம் 
நூல் பிரிவு : GM-02–3121

நூல் அறிமுகம்

இந்து மக்களின் கொடூர வடிவமைப்பில், சாதியத்தின் பற்சக்கரங்களில் சிக்கி பலியாகிக் கிடக்கின்ற, மனிதர்களின் மலத்தை அள்ளும் மனிதர்களைப் பற்றிய விரிவான இந்நூல், நம்மிடையே வெறும் குற்ற உணர்வைத் தூண்டுவதோடு மற்றும் நின்று விடக்கூடாது. ஏனெனில், இந்த உணர்வை இந்த நூல் எளிதில் ஏற்படுத்தும். அதற்குக் காரணம் இந்த நூலாசிரியரின் அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பும், அவருடைய சந்திப்புகளின் வழி நமக்கு அறிமுகமாகும் பல மனிதர்களும், அவர்களின் வாழ்நிலையுமே.

நாற்றம் மலத்தில் இருப்பது உடலியங்கியலின் விளைவு, ஆனால் மலத்தை அகற்றும் மனிதர்களைப் பற்றி பிற மனிதர்களின் மனத்தில், கண்ணோட்டத்தில் இருக்கும் எண்ணம், மலத்தை விட நாற்றமுடையதாகும். இந்நிலையில் நாற்றம் மலத்தை அள்ளுபவரின் கைகளில் இல்லை; மாறாக அவரை அருவெறுப்பாகப் பார்ப்பவரின் மனத்தில் இருக்கிறது என்பதை அரசியல்படுத்த வேண்டியுள்ளது.

இந்த இழி நிலையை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பற்றி பல்வேறு விவாதங்கள் சமூகத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து நடந்து வருகின்றன. தீர்வு கிடைக்க நீண்ட காலம் ஆகலாம். இந்தியாவைப் பொறுத்தவரை சமூக, அரசியல், பொருளாதார விடுதலை மட்டுமே இந்நிலையை மாற்றும்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *