தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-6

தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-6

நூல்கள் அறிவோம்

நூல் பெயர்: தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-6
வெளியீடு : அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி
நூல் பிரிவு : IQ-02-1 1279

நூல் அறிமுகம்

இந்நூலின் ஆறாவது தொகுதி இது. திருக்குர்ஆனின் அல்அன்ஃபால், அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களின் விளக்கவுரை அமைந்துள்ளது.

அல்அன்ஃபால் அத்தியாயம் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பங்கீடு மற்றும் போர்க்கள விதிகள் தொடர்பாகவும், அறப்போரின் (ஜிஹாது) உன்னத நோக்கம் குறித்தும் தெளிவுடன் எடுத்துக் கூறுகிறது. மேலும் இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய பத்ரு போர் நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

அத்தவ்பா அத்தியாயம் வரலாற்றுப் புகழ்மிகு உதவியால் ஒப்பந்தம் பிஸ்மில்லாஹ் பற்றிய சட்ட விதிகள் வக்பு நிர்வாகம் ஜக்காத்து நபிமார்களின் வரலாற்றுச் சுருக்கம் அல்அகபா உடன்படிக்கை சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை திருக்குர்ஆன் அத்தியாய விவரங்கள் போன்றவை அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கியமான பல்வேறு சிறப்பம்சங்களையும் செய்திகளையும் தாங்கியுள்ளது.

இயன்றவரை ஒவ்வொரு கருத்தையும் சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆதாரப்பூர்வமாகவும் வழங்கியுள்ளோம். (ஆதாரங்களை அடிக்குறிப்புகளில் காண்க)

திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் வரலாற்று குறிப்புகளை அறிந்து கொள்வதற்கு வசதியாக, சம்பவங்கள் நடந்த இடங்களில் வரைபடங்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில் கலைச்சொல் அட்டவணையும் தரப்பட்டுள்ளது.

அனைவரும் படித்து உணர்வதற்கு வசதியாக எளிய நடையில் விளக்க உரை அமைந்துள்ளது.

உலகப்பொதுமறையாக திகழ்கின்ற திருக்குர்ஆனின் வசனங்களுக்கு சரியான மொழிபெயர்ப்பு தருவதும், அதன்பின் விரிவான விளக்கவுரை செய்வதும் எளிதான காரியமன்று.

ஒவ்வொரு வசனத்திற்கும் மொழிபெயர்ப்பும் விளக்க உரையும் இறையருளால் நன்கு ஆய்வு செய்த பின்னரே தரப்பட்டுள்ளன.
இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ Islamic Tamil, Tamil Quran

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *