சித்த மருத்துவக் களஞ்சியம்
நூல் பெயர் : சித்த மருத்துவக் களஞ்சியம்
ஆசிரியர் : கே.எஸ்.சுப்பையா பாண்டியன்
வெளியீடு : கற்பகம் புத்தகாலயம்
நூல் பிரிவு : GMD—2115
ஒரு துறைசார்ந்த அனைத்துத் தகவல்களையும் ஆதிமுதல் அந்தம் வரை எடுத்து விளக்குவது தான் ‘களஞ்சியம்’ என்று கூறப்படும். சித்த மருத்துவத்தைப் பற்றி சித்த மருத்துவரே எழுதியுள்ள இந்நூல் “சித்த மருத்துவம்” தொடர்பான அனைத்துத் தகவல்களை தரக்கூடிய 530 பக்கங்கள் கொண்ட ஓர் அற்புதமான புத்தகமாகும்.
நூல் அறிமுகம்
டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகடமியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார். சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தின் நிபுணத்துவம் உள்ளர். அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். இத்துறையில் எண்ணற்ற பல விருதுகளை பெற்ற இவர் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையிலிருந்து சில தகவல்கள்,
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அந்த மானிடப் பிறவியில் ஒரு சித்த மருத்துவராய் வாழ்வது ஒரு வரப்பிரசாதம். லட்சக் கணக்கான மக்களை மூலிகை மருந்துகளால் நோயிலிருந்து காப்பாற்றும் வாய்ப்பு கடவுள் கொடுத்த அருட்கொடை. 18 சித்தர்கள் உலகிற்கு உயிர்க்காக்கும் பொருட்டு அளிக்கப்பட்ட பொக்கிஷத்தை நான் அறிந்தவற்றை இந்த உலகத்தில் உள்ள என் உயிரினும் மேலான தமிழர்கள் படித்துப் பயன்பெற இந்நூலை எழுதியுள்ளேன்.
சித்த மருத்துவத்தை உலகம் முழுவதும் புகழ்பெற்ற மருத்துவமாக்கப் போாராடும் என் முயற்சியில் சிறிய முயற்சி இது.
சித்த மருத்துவத்தைப் பற்றி சித்த மருத்துவரே எழுதியுள்ள இந்த சித்த மருத்துவக் களஞ்சியம் மிகவும் பயனுள்ள ஒரு புத்தகம் ஆகும். இப்புத்தகத்தைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது,
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.