களம் பல கண்ட ஹைதர் அலி

களம் பல கண்ட ஹைதர் அலி

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : களம் பல கண்ட ஹைதர் அலி
ஆசிரியர் : ஜெகாதா
வெளியீடு : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு : GHR-4.1 2394

நூல் அறிமுகம்

நிலமும் ஆகாயமும் தலைகீழாக இடமாற்றம் செய்ய நேர்ந்தாலும் எங்கேனும் உதிர்ந்து கிடக்கும் வீர்து வித்துக்கள் கல்லையும், காற்றையும் துளைத்து விருட்சமாகத் தங்களை எப்ஃபடியும் அடையாளம் காட்டிவிடுவதை நுண்ணிய வரலாற்றுப் பார்வையாளர்களின் கண்கள் படம் பிடித்து விடுகின்றன.

நெஞ்சை உலுக்கும் சாகசம் நிறைந்த வீர வரலாற கருப்பையிலேயே மகிஷாசுரமர்த்தினியின் போர்க்களப் பயிற்சியினைப் பெற்று ஊழிப்புயலாக உருவெடுத்து ஆதிக்க வெறியின் குரல்வளையை உறுத்தெறிந்த களம் பல கண்ட ஹைதர் அலியின் யுத்த சுவாசத்தை இந்நூலின் வாசிப்பு நுகர்ச்சியில் ஒவ்வொரு வாசகனும் நிச்சயம் உணருவான்.

மனிதகுல விடுதலையே வரலாற்றின் நிஜமான வடிவம் என்ற ஐயமறச் சிந்தித்த ஹைதர் அலியின் குதிரைப்பயணச் சத்தம், வாசகன் வாசிப்புக்கு பின்னும் காதில் நிச்சயம் கேட்கும்.

அத்தகைய வீர வரலாற்றுப் புரட்சிப் பயணத்தை அழகிய நூல் வடிவமாகக் கொணர்ந்துள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.