இமாம்கள் வரலாறு
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இமாம்கள் வரலாறு
தொகுப்பு : ஆர்.பி.எம்.கனி
நூல் பிரிவு : IHR-1098
நூல் அறிமுகம்
உத்தமத் திருநபி உலகுக்குக் கற்றுத்தந்த உன்னத வழிமுறை ஒரே நூற்றாண்டுக்குள் சுயநல நோக்கம் கொண்ட தீயவர்களாலும், உள்ளொன்றும் வைத்துப் புறமொன்றான நயவஞ்சகர்களாலும், இஸ்லாத்தின் எதிரிகளின் கையாட்களாலும் சீர்குலைந்து, உருமாறி அழிந்துபடலாமோ என்ற அச்சத்துக்கும் இடமுண்டாகி இருந்தது.
இச்சமயம் தான் நமது மத்ஹபுகளின் இமாம்கள் அடுத்தடுத்து வந்து, நபிபெருமானார் (ஸல்) அவர்களின் சொல் செயல்களின் அடிப்படையிலே சன்மார்க்க நெறிமுறைகளுடன் கூடிய வாழ்க்கைவழியை வகுத்துக்காட்டி இருளில் தத்தளித்த மக்களுக்கு ஒளியை நல்கினார்கள்.
அன்றையக் குழப்பமான சூழ்நிலையில் இந்த இமாம்கள் தேனா்றி வழிகாட்டியிருக்காவிட்டால் அல்லது இவர்கள் தண்டனைக்கு அஞ்சியோ, சன்மானங்களை யாசித்தோ ஒரு சிறிதேனும் விட்டுக்கொடுத்திருந்தால் முஸ்லிம்கள் அன்றே பல்லாயிரம் பிரிவுகளாகிச் சிதறுண்டிப்பர் என்பதை ஒருக்கணம் சிந்தித்தாலும் இவர்களுடன் மகத்தான சேவையை நாம் உணர முடியும்.
இஸ்லாத்தின் கோட்டையத் தூக்கி நிறுத்திய மகத்தான இரும்புத் தூண்களான இமாம் அபூ ஹனீபா (ஹனபி) ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் மாலிக்கி (மாலிக்கி) ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஷாபியீ (ஷாபியீ) ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஹன்பல் (ஹன்பலீ) ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகிய இத்தகைய சிறப்பு வாய்ந்தவர்களின் வரலற்றை அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.