ஒரு நொடிப் பொறிகள்
ஒரு பொறி உங்களுக்குள் தோன்றுகிறதா? அந்தச் சிறு பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்க உங்களால் முடியும். அப்படிப் பெரிதாக்குங்கள். அப்போது உங்களாலும் இந்த உலகைப் புரட்ட முடியும்.உலகம் உருண்டையானது என்று முதலில் சொன்னவனையும் இந்த உலகம் அப்படித்தான் பார்த்திருக்கிறது. அந்த இரண்டும் கண்டிப்பாக நடக்கும். அதன் விளைவு என்ன ஆகும்? உங்கள் சிந்தனை செம்மை அடையும். மின்மினிப் பூச்சிகளைப் போல் தோன்றி மறையும் கருத்துக்களைத் தொகுத்து வைக்க முயற்சிப்பீர்கள். உங்களது இந்தக் கருத்துக்களை வெளியில் சொன்னால் உங்களைப் பைத்தியம் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று மட்டும் எண்ணாதீர்கள்.இதைப் படிக்கும்போது இவ்வளவு சின்ன விசயம் இவ்வளவு சாதித்திருக்கிறதா என்று விழிகளை விரிப்பீர்கள். நம் வாழ்விலும்கூட இப்படி ஏதோ ஒரு நொடிப்பொழுதில் நம் மூளையிலும் பொறி ஒன்று தோன்றியதே என்று எண்ணுவீர்கள்.பெரும்பாலானவர்கள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை, பொறிகளை நிதானமாக அசைபோட மறந்துவிடுகிறார்கள். மறுத்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணப்போவதெல்லாம் ஒரு நொடிச் சிந்தனை காரணமாக இந்த உலகம் எப்படி மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றித்தான். அந்த நொடிப் பொழுதில் அவர்கள் அவற்றை அலட்சியம் செய்திருந்தால் இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கும் இத்தனை வசதிகளும் இல்லாமலே போயிருக்கலாம்.நாம் இன்று அனுபவிக்கும் பல வசதிகள் அறிஞர்களின் எண்ண ஓட்டத்தில் தோன்றிய சிந்தனை மின்னல்களில் உதித்த கண்டுபிடிப்புகளால்தான் சாத்தியமாயின.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.