விண்வெளி 

விண்வெளி 

நூல் பெயர் : விண்வெளி 
நூலாசிரியர் : என்.ராமதுரை 
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் 
நூல் பிரிவு : GSC – 2183

நூல் அறிமுகம்

அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வங்கக்கடலில் புயல் அபாயம் உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

சிறகுகளை விரித்தபடி வானத்தில் மிதந்துகொண்டு இருக்கும் தேவதைகளால் அருளப்படும் அறிவிப்புகள் இவை. அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அந்த தேவதையின் பெயர் செயற்கைக் கோள்.

முழுக்க முழுக்க அதிசயங்கள் மட்டுமே நிறைந்த தனி உலகம் விண்வெளி. பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., என்று நாம் செலுத்தும் ராக்கெட்டுகள் எங்கே போகின்றன? என்ன செய்கின்றன? செயற்கைக் கோள்கள் எப்படி இயங்குகின்றன? எப்படிச் செய்திகளை அனுப்புகின்றன? விண்வெளியில் என்னென்ன இருக்கும்?

வானத்தைப் பார்த்து நீங்களும் உங்கள் குழந்தைகளும் எழுப்பக் கூடிய கேள்விகள் அனைத்துக்கும் இதில் விடை உண்டு.

உங்கள் முதுகில் இரண்டு இறக்கைகளைச் சொருகி, விண்வெளிக்கு அழைத்துச் செல்லப் போகிறது இந்நூல்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.