ஸஹுஹூல் புகாரீ(பாகம்-2)
நூல் பெயர் : ஸஹீஹீல் புகாரி (பாகம்-2)
மூல நூல்ஆசிரியர் : முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல்-புகாரி رحمه الله
தமிழாக்கம்: ரஹ்மத் பதிப்பகம்
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-02 —-3402
நூல் அறிமுகம் :
இஸ்லாமிய மூலாதார நூல்களில் திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற நபிமொழித் தொகுப்பான ஸஹீஹீல் புகாரீ எனும் அரபு நூலின் தமிழாக்கம் இரண்டாம் பாகம் உங்கள் கரங்களை எட்டியுள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தில் 1416 பக்கங்களில் 1597 (1891-3488) நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாகத்தில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்கள் 31(30-60) அவையாவன:
1.நோன்பு(அஸ்ஸவ்ம்).
2.தராவீஹ் தொழுகை(ஸலாத்துத் தராவீஹ்).
3.லைலத்துல் கத்ர்.
4.இஃதிகாஃப்.
5.வணிகம்(அல்புயூஉ).
6.முன்பண வணிகம்(அஸ்ஸலம்).
7.விலைக்கோள் உரிமை(அஷ்ஷுஃப்ஆ).
8.வாடகை(அல்இஜாரா).
9.கடனை மாற்றிவிடல்(அல்ஹவாலா).
10.பிணையேற்றல்(அல்கஃபாலா).
11.செயலுரிமை வழங்கல்(அல்வகாலா).
12.வேளாண்மையும் நிலக் குத்தகையும்(அல்ஹர்ஸ் வல்முஸாரஆ).
13.தோப்புக் குத்தகை(அல்முசாகாத்).
14.கடன்(அல்இஸ்திக்ராள்).
15.வழக்குகள்(அல்குஸுமாத்).
16.கண்டெடுக்கப்பட்ட பொருள்(அல்லுகத்தா).
17.அநீதிகளும் அபகரித்தலும்(அல்மழாலிம் வல்ஃகஸ்ப்).
18.கூட்டுரிமை(அஷ்ஷரிகத்).
19.அடைமானம்(அர்ரஹ்ன்).
20.அடிமை விடுதலை(அல்இத்க்).
21.விடுதலை ஆவணம் பெற்ற அடிமை(அல்முகாத்தப்).
22.அன்பளிப்பு(அல்ஹிபா).
23.சாட்சியங்கள்(அஷ்ஷஹாததாத்).
24.சமாதானம்(அஸ்ஸுல்ஹ்).
25.நிபந்தனைகள்(அஷ்ஷீரூத்)
26.இறுதி விருப்பங்கள்(அல்வஸாயா).
27.அறப்போர்(அல்ஜிஹாத்).
28.ஐந்தில் ஒரு பாகம்(அல்குமுஸ்).
29.காப்புவரி(அல்ஜிஸ்யா).
30.படைப்பின் ஆரம்பம்(பத்உல் கல்க்).
31.நபிமார்களின் செய்திகள்(அஹாதீஸீல் அன்பியா).
இத்தகைய பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.