மோடி மாயை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : மோடி மாயை
ஆசிரியர்: சவுக்கு சங்கர்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GA
*இவ்வருட புதிய வரவுகள்*
ஊழல் ஒழியவில்லை. கறுப்புப் பணம் ஒழியவில்லை , லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என்னும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கங்கை கூட இன்னமும் தூய்மையாக்கப்படவில்லை, அப்படியானால் ‘ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உண்மையில் சாதித்ததுதான் என்ன? இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடுமையாகச் சரிந்திருக்கிறது. குறு, நடுத்தர மற்றும் சிறுதொழில்கள் நலிவடைந்துள்ளன. பெட்ரோல், ‘டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்தியா முழுக்க வெறுப்பு அரசியல் வலுவடைந்திருக்கிறது. மதவாதப்போக்கும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்திருக்கின்றன. பசுவின் பெயரால், மதத்தின் பெயரால், தேசத்தின் பெயரால் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.
*அஞ்சுமன் அறிவகம்*
Comments
Comments are closed.