முஸ்லிமின் அரண்
நூல் பெயர் : முஸ்லிமின் அரண்
நூலாசிரியர் : அஷ்ஷைக் சயீத் பின் அலீ பின் வஹ்ப் அல் கஹ்தானீ
தமிழில் : ஷெய்க் K. முஹம்மத் இக்பால் மதனீ رحمه الله
வெளியீடு : மதனீ பப்ளீகேஷன்ஸ்
நூல் பிரிவு : IA-2.2–5210
நூல் அறிமுகம்
மனிதர்களுக்கு சிரமங்கள், இடையூறுகள், சங்கடங்கள், துன்பங்கள், துயரங்கள், பீதி, பயம் ஆகியவை ஏற்படுகின்றபோது அவற்றிலிருந்து விடுபட ஏதேனும் உபகரணங்களைச் செய்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். அவை அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவன் தூதரின் வழிகாட்டல்களுக்கு முரண்பட்டதாக இருப்பினும் சரியே! ஆனால் அல்லாஹ்வை இரட்சகனாக, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக, இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொண்டவருக்கு அது உரியதோ, உகந்ததோ அல்ல, என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு, தள்ளப்பட்டுள்ளவர்களே நம்மவர்களில் ஏராளம்!
இந்நிலையிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் விடுபட்டு நபி வழியில் வந்துள்ள திக்ருகளை – கூறுவதன் மூலம் இன்னும் பிரார்த்தனைகளை செய்வதன் மூலம் சகலவற்றிற்கும் நிவாரணமுண்டு, இம்முறையை தனதாக்கிக் கொண்டவர் தனக்கு வந்த இன்னல்களை போக்கிக்கொள்ள, தனக்குத் தெரியாது வர இருக்கும் தீமைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழியை உண்டாக்கிக் கொள்ள முடியும், என்ற நிதர்சனமான வழிமுறையை அகிலத்தார்க்கு அருளாக அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தருகிறார்கள்.
இந்நூலாசிரியர் பெரும் முயற்சியை செய்து குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து துஆக்களை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட காரணங்களில், நிலைகளில், நேரங்களில், மற்றும் இடங்களில் ஓத வேண்டிய துவாக்களை திரட்டி இந்நூலில் தொகுத்திருக்கிறார். பொதுவான நேரங்களில் ஓத வேண்டிய துஆக்களை திரட்டி அதற்கும் ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து துஆக்கள் ஆகும். அதுவும் மிகவும் பயனுள்ள நூலாகும்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.