முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி
ஆசிரியர் : அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமீ
வெளியீடு : தாருல் ஹுதா
நூல் பிரிவு : IF-02 2344
நூல் அறிமுகம்
இஸ்லாம் உருவாக்க விரும்புகின்ற முஸ்லிம் பெண்மணியின் தனித் தன்மையைத் துல்லியமாக விவரிக்கிறது.
பெண்ணை இழிவு, இயலாமை, பிற்போக்குத்தனம் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றி கண்ணியம், தன்னிறைவு மற்றும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் சென்றது இஸ்லாம் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
பெண் தன் ஆளுமையை வீரியப்படுத்தி இதுவரை வேறு எங்கும் அடையாத உயர்வை இஸ்லாமிய வரலாற்றில் மட்டும்தான் அடைந்திருக்கிறாள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
மனித அறிவுக்கு ஏற்ப பயிற்சி கொடுக்கப்பட்ட பெண்ணிடம் காணப்படுகிற முரண்பாடுகள், ஒழுங்கீனங்கள், அல்லாஹ்வுடைய வேதம் மற்றும் நபி வழியின் ஒளியில் பயிற்சி கொடுக்கப்பட்ட பெண்ணிடம் இருக்காது என்பதை தெளிவு படுத்துகிறது.
பெண், வீட்டில் அடக்கமாக இருப்பவள், பிள்ளைகளை வளர்ப்பவள். வீட்டை நிர்வகிப்பவள் என்று மட்டும் இல்லாமல் அவள் ஒரு சகாப்தம், வீரர்களை உருவாக்குபவள், சிறந்த தலைமுறைக்கு வித்திடுபவள், அழைப்புப்பணியின் முன்னோடி, வாழ்க்கையைச் செம்மைப்படுத்த பெரும் தகுதி பெற்றவள், ஆணுக்குத் துணை நிற்பவள் என்று பெண்ணின் பங்கைத் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாமிய அறிவையும், ஒழுக்கத்தையும் பெற்ற பெண்தான் உயர்ந்தவள், சீர்பெற்றவள், விழிப்புடையவள், திறமையானவள், தூயவள், அவள் தன் இறைவனுக்கு, தனக்கு, தன் பெற்றோருக்கு, தன் கணவனுக்கு, தன் பிள்ளைகளுக்கு, தன் மருமகள், மருமகன்களுக்கு, தன் உறவினர்களுக்கு, தன் அண்டை வீட்டாருக்கு, தன் சகோதரிகளுக்கு, தன் தோழிகளுக்கு மற்றும் தன் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அறிந்தவள் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.
இவை அனைத்தையும் சரியான ஆதாரங்களுடன் தெளிவான நடையில் இந்நூலில் விவரிக்கிறார் இதன் ஆசிரியர்.
குறிப்பாக முஸ்லிம் பெண்களும், பொதுவாக எல்லாப் பெண்களும் அவசியம் படித்து உணரவேண்டிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.