பெரும் பாவங்கள்
நூல் பெயர் : பெரும் பாவங்கள்
நூலாசிரியர் : இமாம் ஷம்சுத்தீன் அத் தஹபீ رحمه الله
தமிழில் : மௌலவி. பாஸில்.எஸ்.எம். முஸ்தபா மௌலானா
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
நூல் பிரிவு : IA-2.2–5204
நூல் அறிமுகம்
இந்த நூல் பெரும் பாவங்களையும் – அல்லாஹ், ரசூலினால் ஹராமாக்கப்பட்டவைகளையும் தெளிவுபடுத்தும் நூலாகும்.
பெரும் பாவங்கள் எனப்படுபவைகள் அல்லாஹ்வினாலும், அவன் தூதரினாலும் (வேதத்திலும், நபிமொழியிலும்) விலக்கப்பட்டவைகளையே குறிக்கும். பெரிய பாவங்களைத் தவிர்த்து நடந்தவர்களுடைய சிறு பாவங்களை மன்னித்துக் கொள்வேன் என அல்லாஹ் கூறியுள்ளான்.
உங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ் சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கிவிடுவோம். மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம். (அல் குர்ஆன்- 4:31)
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.