பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள்
ஆசிரியர் : வெ.தமிழழகன்
பதிப்பகம் : விவேக் எண்டர்பிரைசஸ்
நூல் பிரிவு : GL-02
நூல் அறிமுகம்
ஆணும் பெண்ணும் கூடி ஒரு சமூகமாக வாழத் துவங்கிய பிறகு தான் பிரச்னைகளும் துவங்குகின்றன. உணர்வுக்கும் புத்திக்கும் இடையே நடக்கும் யுத்தம், உறவுக்கும் சமூகத்துக்கும் இடையே பாதிப்புகளையும், வேதனைகளையும் உண்டாக்கி, பிரிவைத் தருகின்றன.
மாதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உயிர் இப்பதைப் போல் உரிமைகளும் இருக்கின்றன. அந்த உரிமைகளைச் சட்டம் வாயிலாகத் தெரிந்து கொண்டால், பிரிவுகளும் பிரச்னைகளும் காத தூரம் ஓடிவிடும்.
வறுமை, கல்லாமை, சமூக பொருளாளாதாரத் தடைகள் காரணமாக சட்ட நிவாரணம் பெற இயலாத பெண்களும், தமது உரிமைகள் மற்றும் நிவாரணம் பெறுவதற்காகவும், சட்டப்படியான சமூகப் பாதுகாப்பு பெறவும் இந்தப் புத்தகம் மிகவும் உதவும்.
இதைப் படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைத் துணைவருடன் கூடி வாழ்ந்து கோடி நன்மை பெறுவது தின்னம்.
பெண்களுக்கு மிகவும் பயனுள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.