பிளிங்க்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : பிளிங்க்
மூல நூல் ஆசிரியர் : மால்கம் கிளாட்வெல்
தமிழில் : சித்தார்த்தன் சுந்தரம்
பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ்
நூல் பிரிவு : GMA – 1462
நூல் அறிமுகம்
திறமையும், வாய்ப்புகளும் நிறைந்தவர்களாக இருக்கும் பெரும்பாலான மனிதர்களுக்கு, வெற்றி கை கூடாமல் இருப்பதற்குக் காரணம், சரியான நேரத்தில் கூட திடமான முடிவுகளை எடுக்கத் தெரியாததுதான். அதேபோல், முடிவுகளை எடுக்கத் தெரிந்தவர்களும் கூட, தேவையான நேரத்தில் உடனடி முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார்கள்.
இந்த நூலில், பல நுட்பமான அம்சங்களை நூலாசிரியர் அலசியுள்ளார். முகபாவங்களில் இருந்து எதிராளிகளின் மன ஓட்டத்தை அறிவது எப்படி? யதார்த்த வாழ்க்கையில் உள்ளுணர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் எவை? தம்பதியர்களின் உரையாடல்களில் இருந்தே அவர்களின் திருமண வாழ்க்கை குறித்து புரிந்து கொள்ள முடியுமா? உறவுகளைப் பேணுவதற்கு அவசியமான குணங்கள் எவை? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு ஆழமான பதில்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
புதிதாக ஒருவரைச் சந்திக்கும்போது, அல்லது சிக்கலான சூழ்நிலை ஒன்று ஏற்படும்போது, மனம் இறுக்கம் உள்ளபோது, விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகும்போது, நமக்குள் உடனடியாக ஏற்படும் கருத்துகள், மதிப்பீடுகள், முடிவுகள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன என்று இந்நூல் ஆராய்கிறது.
சின்னச் சின்ன மாற்றங்களை ஒன்று சேர்த்தால், அது வித்தியாசமான, சிறந்த ஓர் உலகத்தை உருவாக்கும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
சுயமுன்னேற்றம் சார்ந்த உளவியல் நூல் என்றாலும், நூலைப் படிக்கும்போது அந்த உணர்வு ஏற்படவே இல்லை. உதாரணங்கள், கதைகள் ஆகியவற்றின் மூலம் கருத்துகளை விளக்கியிருப்பதால், ஒரு நாவலைப் படிக்கும் உணர்வே ஏற்படுகிறது. முன்னேற்றத்திற்கான மூலதனமாகத் திகழும் இந்நூலைப்புப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.