பாகிஸ்தான் போகும் ரயில்
நூல் பெயர் : பாகிஸ்தான் போகும் ரயில்
ஆசிரியர் : குஷ்வந்த் சிங்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GN – 2209
நூல் அறிமுகம்
1947-ல் இந்தியா சுதந்தரம் பெற்றது. அதே நேரத்தில்தான் மாபெரும் துயர் இந்தியாவைச் சூழ்ந்தது. தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தேசம் மட்டுமல்ல, லட்சக்கணக்கானோரில் உடல்களும் பிளக்கப்பட்டன. உடைமைகள் அபகரிக்கப்பட்டன. பெண்கள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அருகருகே நட்புடன் வசித்துவந்த மக்கள் ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் தாக்கிக்கொண்டனர். ஒருவரது குற்றத்தை முன்வைத்து அடுத்தவர் தம் குற்றங்களை அரங்கேற்றத் தொடங்கினர்.
மனிதர்களின் வெறித்தாண்டவம் பேயாட்டம் ஆடிக்-கொண்டிருக்கும் பின்னணியில், பஞ்சாபில் ஒரு கிராமம் மட்டும் அமைதியாக இருக்கிறது. அப்படி அந்த கிராமத்து முஸ்லிம்களும் சீக்கியர்களும் மட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? அந்த அமைதியைக் குலைக்கிறது பாகிஸ்தானிலிருந்து வரும் ஒரு ரயில். அதில் எண்ணற்ற இந்து, சீக்கியப் பிணங்கள். பழிக்குப் பழியா? பாகிஸ்தானுக்குப் புலம் பெயரும் முஸ்லிம்கள் அடங்கிய ரயிலுக்கு என்ன ஆகப் போகிறது? அதுதான் கதை. இந்தக் கதைக்கு இடையில் ஒரு மென்மையான காதல், அரசியல்மீதான ஆழமான பார்வை, சீக்கிய மதத்தைப் பற்றிய விமரிசனம், அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குத்தல், காவல்துறை மீதான கருத்துகள் என்று எண்ணற்ற சித்திரங்களை வரைந்து செல்கிறார் குஷ்வந்த் சிங்.
எழுதப்பட்டு 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் வலுவாக நம்முன் நிற்கிறது இந்தக் கதை.
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.