*நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் *

*நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் *

நாளை என்றால் காலாதாமதம் ஆகிவிடும். இன்றே வாழ்ந்து விடுங்கள்.இன்றைக்கு மட்டும் வாழுங்கள். வாழ்க்கை பூராவும் உள்ள பிரச்னைகள் குறித்து இன்றைக்கே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருப்பதற்கு உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி எல்லாவற்ற‌ையும் சரியாக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் ‌யாருடன் பழகினாலும் அவர்களுடன் இணக்கமாக பழக முயற்சி செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையின் இனிமையினை அனுபவியுங்கள். குடும்பம்தான் வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்கின்ற இடம். அந்தரங்கமான விஷயங்களை விவாதிக்கின்ற இடம். கருத்துக்களையும் திட்டங்களையும் பரஸ்பர நம்பிக்கையுடன் பரிமாறிக் கொள்கின்ற இடம். உற்சாகமான தோற்றத்துடன் இருங்கள். பண்புடன் பழகுங்கள். புகழ்வதில் தாராளம் காட்டுங்கள். ஒவ்வொரு விஷயத்திலும் குற்றம் குறை கண்டுபிடித்துச் கொண்டு இருக்காதீர்கள். ஓர் எடுத்துக்காட்டாக விளங்கி மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள். யாருக்காவது நல்லது செய்யுங்கள்.மற்றவர்களின் சொற்கள் உங்களைப் புண்படுத்த வேண்டாம். பொறுமை இழந்தவராக உங்களைக் காட்டிக் கொள்ளவும் வேணடாம்.நேற்றைய கவலைகளின் மிச்சங்களை இன்றைக்கு உங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். நாளைய கவலைகளை முன்கூட்டியே வருவித்துக் கொள்ளாதீர்கள். எதிர்காலத்தை நினைவிலிருந்து அகற்றுங்கள். ஒவ்வொரு மணி நேரத்திலும் சிறப்பாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். கையில் உள்ள ‌வேலையில் முழுமையாக கவனம் செலுத்துங்கள்.

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.