தமிழக அரசியல் வரலாறு பாகம்-1
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : தமிழக அரசியல் வரலாறு பாகம்-1
ஆசிரியர்: ஆர். முத்துக்குமார்
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்
நூல் பிரிவு :GP
நூல் அறிமுகம்
சுதந்திரத்திற்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக வரலாற்று பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்த புத்தகம்.
ராஜாஜியின் ஆட்சி, ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வி, காமராஜர் காலம், பக்தவத்சலத்தின் வருகை, இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் வளர்ச்சி, காங்கிரசின் வீழ்ச்சி, அண்ணாவின் ஆட்சி, திமுகவின் பிளவு, கட்சத்தீவு, எமர்ஜன்சி, சர்க்காரியா கமிஷன் என்று மிகவிரிவான களப்பணியுடன் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொன்றின் உள்ளரசியலையும் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.
கீழவெண்மணி படுகொலைகள், முதுகுளத்தூர் கலவரம், மதுவிலக்கே ரத்து என்று சமூகத் தளத்தை உருமாற்றிய நிகழ்வுகளின் மெய்யான அரசியல் பின்னணியைப் படம்பிடிக்கும் இந்த புத்தகம், அன்றைய தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த – இன்றைய அரசியலின் அடித்தளமாக இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை நிகழ்வுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறது.
தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான ஆடு… புலி… அரசியல் தொடரின் நூல் வடிவம் இது.
இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் முதல் பாகம் இது. பயனுள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.