ஜாமிஉத் திர்மிதீ(பாகம்-1)
நூல் பெயர் : ஜாமிஉத் திர்மிதீ(பாகம் 1)
மூலநூலாசிரியர் : இமாம் அபூஈசா முஹம்மத் பின் ஈசா அத்திர்மிதீ رحمه الله
தமிழாக்கம் : ரஹ்மத் அறக்கட்டளை
வெளியீடு : ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு : IH-01–970
நூல் அறிமுகம்
ஜாமிஉத் திர்மிதியின் முழுப்பெயர் : ‘அல்ஜாமிஉல் முகத்தஸர் மினஸ் ஸுனன் அன் ரஸூலில்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வ மஅரிஃபத்தீஸ் ஸஹீஹ் வல்மஅலூல் வ மா அலைஹில் அமல்’ என்பதாகும். இதன் பொருளாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகள், ஆதாரப்பூர்வமான மற்றும் குறைபாடுள்ள நபிமொழிகள், மக்களின் வழக்கில் உள்ள நடைமுறைகள் ஆகியவற்றின் சுருக்கத் திரட்டு.
ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் முதலாவது பாகமான இந்நூலில் மொத்தம் ஆறு அத்தியாயங்களும் 887 ஹதீஸ்களும் இடம்பெறுகின்றன. ஆரம்பத்தில் மூலநூலாசிரியர் இமாம் அபூஈசா முஹம்மத் பின் ஈசா அத்திர்மிதீ ரஹீமஹுல்லாஹ் அவர்கள் பிற்சேர்க்கையாக இணைத்துள்ள அறிவிப்பாளர்கள் தொடர்பான விமர்சனம் ‘அல் இலல்’ எனும் தலைப்பில் 72 பக்கங்களில் இடம்பெறுகிறது.
அதையடுத்து தூய்மை(அத் தஹராத்), தொழுகை(அஸ் ஸலாத்), ஜுமுஆ(அல் ஜுமுஆ), கட்டாய தர்மம்(அஸ் ஸகாத்), நோன்பு(அஸ் ஸவ்ம்), ஹஜ்(அல் ஹஜ்) ஆகிய ஆறு அத்தியாயங்களில் 887 ஹதீஸ்கள் 1148 பக்கங்களில் இடம்பெறுகின்றன.
இவையன்றி நூலின் தொடக்கத்தில் 37 பக்கங்களில் ‘நபிமொழி இயல்’ எனும் தலைப்பில் அரிய தகவல்கள் இடம்பெறுகின்றன. இதில் நபிமொழி இலக்கணம், நபிமொழி தொகுக்கப்பெற்ற வரலாறு, நபிமொழி அறிஞர்கள் பற்றிய குறிப்புகள், நபிமொழி கலைச்சொற்கள், நபிமொழி வகைகள், நபிமொழித் தொகுப்புகளின் வகைகள், ஜாமிஉத் திர்மிதியின் தனியான கலைச் சொற்கள், இமாம் திர்மிதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை வரலாறு, வரைபடங்கள் உள்ளிட்ட அபூர்வ செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஆகா மொத்தம் 1357 பக்கங்கள் ஆகின்றன.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.