சீமைக்கருவேலம்
நூல் பெயர் : சீமைக்கருவேலம்
நூலாசிரியர் : ப.அருண்குமார்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூல் பிரிவு : GAG -1260
நூல் அறிமுகம்
நாம் வாழும் சூழலைப் பற்றிய கரிசனம் இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் வாழ்வாதாரங்களாகிய நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடுத்தப்படுவதையும் சுரண்டப்படுவதையும் எந்தவொரு கவலையுமின்றிக் கடந்து செல்லும் மனப்போக்கு நம்மிடையே வேரூன்றிவிட்டது. தொடர்ந்து சூழல் பிரச்சனைகள் தோன்றினாலும், அவை அந்தப் பகுதிச் சார்ந்தப் போராட்டமாகவே இதுவரையில் அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இதற்கான உள்ளார்ந்த காரணம் சூழல் பிரச்சனைகள் வலுவான ‘மக்கள் இயக்கங்களாக’ உருமாற்றம் அடையாததே.
தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமித்த முக்கியமான அயல் தாவரங்களில் ஒன்றான சீமைக்கருவேலம் பற்றிய ஒரு படைப்பு இந்தத் தருணத்தில் வெளிவருவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல முயற்சியாகும். இந்த நூல் நிச்சயமாகச் சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள், தாவரவியல், பாமர மக்கள், விவசாயிகள் போன்றோரின் கவனத்தை ஈர்க்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.