சாமானியனுக்கான சட்டங்கள்
நூல் பெயர் : சாமானியனுக்கான சட்டங்கள்
ஆசிரியர் : வழக்கறிஞர் த.இராமலிங்கம்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GL – 3139
நூல் அறிமுகம்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும் அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். ஒருவர் எந்த குற்றமும் செய்யாத பட்சத்தில் அவர் காவல் நிலையத்தின் புகாருக்கு உட்பட்டிருந்தால், அவருக்கு சட்டங்கள் பற்றிய அடிப்படை தகவல்கள் தெரிந்திருக்கும்போது தன் மீது சாட்டப்பட்ட குற்றம் பொய் என்றும் ஆதாரங்கள் போலியானது என்றும் நிரூபிக்க முடியும். நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றுள் ஏதோ ஒரு வேலையாக நுழைபவர்களுக்கு, சில சட்ட நிலைகள் மற்றும் நடைமுறைகள் கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். பிணை, விசாரணை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், காவல் துறையின் கடமை, சிறைச்சாலையில் கைதிகள் வைக்கப்பட வேண்டிய முறைகள், நீதிமன்றத்தில் சாமானியன் நடந்துகொள்ளவேண்டிய முறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் வழக்கறிஞர் த.இராமலிங்கம். நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் நம் நாட்டின் சட்ட நிலைகளுக்குக் கட்டுப்பட்டே செயல்படும். சட்டம் என்ன சொல்கிறதோ அதற்கு மாறுபட்டு நீதிமன்றங்கள் செயல்படாது; செயல்படக்கூடாது. ஒரு நீதிமன்றத்தின் செயல்பாடோ அல்லது தீர்ப்போ சட்ட நிலைக்கு முரணாக அமைந்துவிடுமானால், அதற்கடுத்த உயர்ந்த நிலையில் இருக்கும் நீதிமன்றம் உடனே அதைச் சரிசெய்துவிடும் என்பன போன்ற பல அரிய தகவல்களைக் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பம்சம். சிக்கல்களிலிருந்து விடுபட, சிக்கல்களை எதிர்கொள்ள சாமானியனுக்கான சட்டங்களை அறிவோம் வாருங்கள்!
இந்நூலைப் படித்துப் பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.