சாதி தேசத்தின் சாம்பல் பறவை
நூல் பெயர் : சாதி தேசத்தின் சாம்பல் பறவை
ஆசிரியர் : எவிடன்ஸ் கதிர்
பதிப்பகம் : விகடன் பதிப்பகம்
நூல் பிரிவு : GM – 02-3496
நூல் அறிமுகம்
சாதி – தீச்சுவாலையைவிட கொடுஞ்சூடு நிறைந்த சொல்லாக மருவிக் கொதிக்கிறது. தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட சாதி, இடையே இழிவான தொழில் செய்பவன் இழிந்த சாதி என ஆதிக்க சமுதாயம் மனிதத்தைக் கூறுபோட்டுப் பிரித்தது. இதன் விளைவு, தலித்துக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் அவர்களது உடைமைகள் தீயிடப்படுவதும், தலித் பெண்கள் காட்டுமிராண்டித்தனமாக கற்பழிக்கப்படுவதும் ஆகும். சாதியம், பள்ளிகளில் தன் கோர நாக்கை விரிக்கிறது. தலித் மாணவர்கள் மீதான ஆதிக்கத்தை ஆதிக்க சாதி மாணவர்கள் செலுத்தும் நிலையும் ஒரு புறமும், வழிபாட்டுத் தலங்கள் தீண்டாமை எனும் கொடுமரம் வேர் பிடித்து விறுவிறுவென வளர்ந்து தலித்துக்களின் கழுத்தை நெரிக்கிறது. மலத்தை வாயில் ஊற்றி மனிதத்தைக் கொன்று புதைத்த தமிழகத்தில், களத்தில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்காகப்
மிகவும் பயனுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.