காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய – ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும் )
நூல் பெயர் : காலத்தை வென்ற காவிய நட்பு (இந்திய – ரஷ்ய பண்டைய உறவும் பண்பாட்டுப் பரிமாற்றமும் )
ஆசிரியர் : பழ.நெடுமாறன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
நூல் பிரிவு : GHR-5–3780
நூல் அறிமுகம்
இந்நூலுக்கு பழ. நெடுமாறன் காலத்தை வென்ற காவிய நட்பு’ என்று தலைப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் இந்திய – ரஷ்ய நட்பு என்பது இரண்டு அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட நட்பு அன்று. இரண்டு நாட்டு மக்களின் இதயங்களால் இணைக்கப்பட்ட நட்பாகும்.
தம்முடைய முன்னுரையில் பழ.நெடுமாறன் அவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக இந்த நூலை எழுதும் முயற்சியில் ஈடுப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நூலுக்கு அவர் பயின்ற நூல்கள், சேகரித்த செய்திகள் அனைத்தையும் ஆதாரத் தன்மையுடன் ஒப்புநோக்கி எழுதுவது; அதுவும் எளிய நடையில் அனைவரும் படிக்கும் வகையில் எழுதுவதென்பது எளிதானதன்று. ஆனால் இந்த முயற்சியில் பழ.நெடுமாறன் அவர்கள் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்.
பழ.நெடுமாறனின் இந்த நூல் அளவில் பெரியது மட்டுமின்றி சொல்லிய விஷயமும் பெரியது. அவரது எழுத்துப் பணியில் இந்த நூல் அவருக்கு மகுடமாகும்.
வள்ளுவப் பேராசானின் வாக்கிற்கு ஏற்ப “மனைத்தக்க மாண்புடையவளும்”, என் வாழ்க்கைத் துணைநலமுமான திருமதி பார்வதி அவர்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன் என்று இந்நூலின் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.