ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்
நூல் பெயர் : ஓல்ட்டேஜ் ஸ்டெபிலைசர் & இன்வெர்ட்டர் மெக்கானிசம்
மூல நூல்ஆசிரியர் :மாஸ்டர் G.சுப்பிரமணியன் ( ஜி.எஸ்.)
பதிப்பாசிரியர் :விகரு.இராமநாதன்
வெளியீடு :ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
நூல் பிரிவு : GAR–2439
நூல் அறிமுகம்:
முதன் முதலாக மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டவுடன், அந்த மின்சாரத்தின் மூலமாக மின் விளக்குகள் எரிந்தன, மின் மோட்டார்கள் இயக்கப்பட்டன. அப்போது அதுவே அதிசயமாக இருந்தது. அப்போது இருந்த மின்சாதனங்களுக்கு, ஸ்டெபிலைசர் தேவைப்படவில்லை. ஆனால், இந்தக் காலத்தில் மின்சாரத்தின் மூலமாக பலவிதமான நவின மின்சாதனங்கள் இயங்குகின்றன. ஆகவே, தற்காலத்திற்கு ஸ்டெபிலைசர்கள் அவசியமாகத் தேவைப்படுகிறது. பலவிதமான டி.வி., ஏர்கண்டிஷனர்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், மேலும் பல்வேறு நவின மின்சாதனங்களுக்கும் ஏற்றவாறு பலவிதமான நவின ஸ்டெபிலைசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. முற் காலங்களில் மின்வெட்டு ஏற்படும் போது ஜெனரேட்டரைப் பயன்படுத்தினர். ஜெனரேட்டரை பயன்படுத்தும் போது அதிக பொருள்செலவும் அதிக உடல் உழைப்பும் தேவைப்படுகிறது. ஆகவே, தற்காலத்தில் ஜெனரேட்டருக்கு பதிலாக இன்வெர்டர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நூல் மூலமாக ஸ்டெபிலைசர் மற்றும் இன்வெர்டர் பற்றிய மெக்கானிசம் முழுமையாகக் கற்றுதரப்படுகிறது. ஆகவே, நீங்களும் ஸ்டெபிலைசர் & இன்வெர்டர் மெக்கானிசம் கற்று நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம்.
இந்தப் புத்தகத்தை படித்து ஸ்டெபிலைசர் & இன்வெர்டர் மெக்கானிசம் கற்க முடியும் என்று நீங்கள் உறுதியாக நம்பிவிட்டால் அது நிச்சயமாக உங்களால் முடியும், அதுவும் ஒரே மாதத்தில் கற்க முடியும். சுமார் 30 ஆண்டு காலமாக எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் துறையில் தொழில் செய்தும், தொழிற் கல்வி நிலையங்களில் பணிபுரிந்தும், பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தும், பல தொழிற் கல்வி புத்தகங்களை எழுதியும் நல்ல அனுபவமுள்ள ஆசிரியரால் இப் புத்தகம் எழுதபட்டுள்ளது. இதற்கு முன்பாக இவர் எழுதிய பல எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் புத்தகங்கள் யாவும் தமிழக நூலக ஆணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டன. ஆசிரியரின் புத்தகங்களை படித்து தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே நீங்களும் இந்நூல் மூலமாக ஸ்டெபிலைசர், இன்வெர்டர் மெக்கானிசம் கற்று நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
இத்தகைய அறிவுள்ள நூல்களை கற்று மேலும் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது .
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.