எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
ஆசிரியர் : இலந்தை சு.ராமசாமி
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GHR-4.5
நூல் அறிமுகம்
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸஃ ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார். எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம்.தாமஸ் ஆல்வா எடிசன் மானுட குலத்துக்குக் கிடைத்த ஒரு கொடை. அறிவியல் என்பது அதிசயங்களை நிகழ்த்திக்காட்ட அல்ல; நம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத்தான் என்பதை முதன் முதலில் உணர்த்தியவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளாரின் சுவையான வாழ்க்கை வரலாறு இந்நூல்.நம்மில் ஒவ்வொருவரும் எடிசனின் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை தினம் தோறும் பயன்படுத்தியே வருகிறோம். பலருக்கு அவரது கண்டுபிடிப்பு சாதனத்தைக் கொண்டே தொழிலுமு வாழ்வும் நடக்கிறது. அதனால்தான் விஞ்ஞானிகளில் அவர் வெற்றிகரமான மனிதராக போற்றப்படுகிறார். ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்கிற கருத்தையே தனது வாழ்வாகக் கொண்டவர். அதனால் தன்னம்பிக்கைக்காரர்களுக்கெல்லாம் அவரே தலைவன்; தத்துவாசிரியன்; ஞான குரு.உலகம் கொண்டாடும் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளரான எடிசனின் சாதனைச் சரித்திரம்தான் இந்த ஒலிப்புத்தகம்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.