இப்னு கஸீர் (பாகம்-7)

இப்னு கஸீர் (பாகம்-7)

 

நூல் பெயர்:இப்னு கஸீர் (பாகம்-7)
மூல நூலாசிரியர்:இமாம் அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் رحمه الله
வெளியீடு:ரஹ்மத் பதிப்பகம்
நூல் பிரிவு: IQ-02–929

நூல் அறிமுகம்:

உயர்ந்தோன் அல்லாஹ்வின் பேரருளால்,திருக்குர்ஆன் விரிவுரைகளில் முதல்தரமானதும் பிரசித்திபெற்றதுமான *தஃப்சீர் இப்னு கஸீர்*(முக்த்தஸர்) தமிழாக்கம் ஏழாவது பாகம் வெளிவந்திருக்கிறது.

இந்தப் பாகத்தில் அல்அன்கபூத்(சிலந்தி) அத்தியாயத்தில் (29) 69 வசனங்கள்,அர்ரூம்(கிழக்கு ரோமாபுரி) அத்தியாயத்தில் (30) 60 வசனங்கள்,லுக்மான்(தத்துவ மேதை லுக்மான்) அத்தியாயத்தில் (31) 34 வசனங்கள், அஸ்ஸஜ்தா(சிரம்பணிதல்) அத்தியாயத்தில் (32) 30 வசனங்கள், அல்அஹ்ஸாப்(கூட்டுப்படைகள்) அத்தியாயத்தில் (33) 73 வசனங்கள், ஸபஉ(சபேயியன் மக்கள்) அத்தியாயத்தில் (34) 54 வசனங்கள், ஃபாத்திர்(முன்மாதிரியின்றி படைப்பவன்) அத்தியாயத்தில் (35) 45 வசனங்கள், யா சீன் அத்தியாயத்தில் (36) 83 வசனங்கள், அஸ்ஸாஃப்பாத்(அணிவகுத்து நிற்போர்) அத்தியாயத்தில் (37) 182 வசனங்கள், ஸாத் அத்தியாயத்தில் (38) 82 வசனங்கள், அஸ்ஸுமர்(கூட்டங்கள்) அத்தியாயத்தில் (39) 75 வசனங்கள் என மொத்தம் 11 அத்தியாயங்களில் 793 திருவசனங்களின் விரிவுரை இடம்பெறுகிறது.

இந்த 11 அத்தியாயங்களின் விரிவுரை மொத்தம் 978 பக்கங்களில் இடம்பெறுகிறது. முற்சேர்க்கைகளான அணிந்துரைகள்,கலைச்சொல் விளக்கம், பொருள் அட்டவணை, மூல நூலாசிரியர் வாழ்க்கைக் குறிப்பு முதலான தகவல்கள் 190 பக்கங்களில் இடம்பெறுகின்றன. மொத்தம் 1168 பக்கங்களில் இந்தப் பாகம் வெளிவந்துள்ளது.

திருக்குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பு,விரிவுரை தமிழாக்கம்,அடிக்குறிப்பு விளக்கங்கள் ஆகியவற்றுக்குக் கீழ்க்காணும் விரிவுரை நூல்களும் அகராதிகளும் பயன்படுத்தப்பெற்றுள்ளன.

1.தஃப்சீர்கள்.
2.நபிமொழித் தொகுப்புகள்.
3.வரலாற்று நூல்கள.
4.அறிவிப்பாளர் தகுதி ஆய்வு நூல்கள்.
5.நபிமொழி விரிவுரைகள்.
6.மொழி அகராதிகள்.
7.இடங்கள் தொடர்பான அகராதிகள்.
8.தகவல் களஞ்சியங்கள்.
9.அறிவியல் நூல்கள்.
10.அட்லஸ்கள்.
11.இணையதள வரவுகள்.
12.வேதாகமங்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

அருள்மறை திருக்குர்ஆனைப் பொருள் அறிந்து செயல்படுத்த இந்த மாபெரும் விரிவுரை நிச்சயமாகத் துணை புரியும் என உறுதியாக நம்புகிறோம்.

நீங்களும் படியுங்கள்; உங்கள் நண்பர்களும் படிக்க ஆர்வமூட்டுங்கள்; முஸ்லிமல்லாத நண்பர்களுக்கு இந்நூலை அறிமுகப்படுத்துங்கள்;

முடிந்தால் இந்நூலை வாசிக்க அஞ்சுமன் அறிவகத்திற்கு வாருங்கள்.

இறைமறை குர்ஆனை ஓதி,அதன் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கப் படியுங்கள் இந்த விரிவுரையை.பின்பற்றுங்கள் வாழ்க்கையில்.

வாசிப்புதான் அறியாமையை அகற்றும்.அறியாமை அகன்றால் அகத்தில் ஒளி பிறக்கும்.அவ்வொளி உங்களை வழிநடத்தும்.இம்மையிலும் மறுமையிலும் வெற்றிவாகை சூடலாம்.அல்லாஹ் அருள்புரிவானாக!

இந்தப் பாகத்தில் நீங்கள் வாசிக்கப்போகும் 11 அத்தியாயங்களில் ஒவ்வொன்றும் முக்கியமானது; சிறப்பிற்குரியது; இறைவனையும் அவன் படைப்புகளையும் அறிய வழிகாட்டக்கூடியது. கவனமாகப் படியுங்கள்; மற்றவர்களையும் படிக்கத் தூண்டுங்கள். இறைமறையின் வெளிச்சம் உள்ளத்தினுள் புகுந்துவிட்டால், உங்களை நீங்களே ஒரு புது மனிதனாகப் பார்ப்பீர்கள். இது சத்தியம்..

இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Quran

Share the Post

About the Author

Comments

Comments are closed.