இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
நூல் பெயர் : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?
நூலாசிரியர் : குகன்
வெளியீடு : மதி நிலையம்
நூல் பிரிவு : GA-599
நூல் அறிமுகம்
வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தைக் குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ரா’ (RAW – Research and Analysis Wing).
ரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்துத்தான் ஒரு நாட்டு டன் கூட்டணி வைக்கவேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது. அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்சனைகளின் பின்னணி என்ன? அரசியல் என்ன? யார் காரணம்? எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்கள், பயிற்சிகள் என்னென்ன? எப்படித் திட்டமிடுகிறார்கள் என சகல அம்சங்களையும் கண்டுபிடிப்பதன் மூலம் இந்தியாவின் ஆயுதமாகவும் கவசமாகவும் இருக்கிறது, ரா.
ரா அமைப்பின் வெற்றி – தோல்வி மற்றும் சறுக்கல்களுக்கான பதறவைக்கும் உண்மையான உளவுப் பின்னணியில் விளக்குவதுடன், ரா அமைப்பின் முழு வீச்சையும் எளிமையான மொழியில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் குகன்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.