வத்ஸலாவின் நாவல் வெறும் அம்மா-மகள் கதை மட்டுமல்ல. ஏராளமான இதர பாத்திரங்கள் ஆசிரியையுடைய அகன்ற சொல்லோவியத்தில் அவரவர்களுடைய பங்கைப் பெறுகிறார்கள். பொதுவாக சுயநலம் என்ற குணம் இந்த நாவலின் பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுகிறது. தொடக்கத்தில் வரும் சொற்களும் சிந்தனைகளும் இறுதியிலும் வந்து வட்டத்தைப் பூர்த்தி செய்கின்றன.(அசோகமித்திரன் முன்னுரையிலிருந்து)
அஞ்சுமன் அறிவகம்... Read More
இந்து மதத்தை பற்றிய உலகின் மிகச்சிறந்த அறிஞர்களில் ஒருவரின் முன்னோடியான படைப்பு. ஏற்கனவே அதன் அசாதாரணமான ஆழ்நோக்கு, பகுப்பாய்வு ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றது. இந்த புத்தகம் ஒரு செவ்வியல் நூலாகும் தகுதி படைத்தது. டோனிகருடைய நூல் தனது வீச்சில் மிக வியப்பூட்டுகின்ற ஒன்று. இதற்குமுன் எவரும் இத்தகைய நூல் ஒன்றை எழுத முடியும் என்று நினைத்தும் இருக்கமாட்டார்கள்… பரிவுணர்ச்சியோடும், ஒத்துணர்வோடும், நகைச்சுவையோடும், கூருணர்வோடும் எழுதுகிறார்… ஒரு சிறந்த புத்தகம்.... Read More
வாழ்வை வசப்படுத்துவது தன்னம்பிக்கை கொள்ளவைக்கும் வார்த்தைகள்தான். செயலைத் தூண்டும் சக்தி வார்த்தைகளுக்கு உண்டு. தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் மனித வாழ்வுக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றன. இந்தப் புத்தகத்தின் மூலம் மகத்தான வாழ்வுக்காக லட்சிய சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார் நூல் ஆசிரியர் வெ.இறையன்பு. வாழ்வின் பிரச்னைகளுக்குத் தீர்வு அவற்றை அணுகும் முறையில் இருக்கிறது. பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது? அவற்றை எவ்வாறு தீர்ப்பது? எல்லாப் பிரச்னைகளையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. ... Read More